Posts

சனிக்கிழமையும் பெருமாளும்

Image
சனிக்கிழமை பெருமாள் --------------------------------------------- ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது. சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!”

புத்ரதா ஏகாதசி

Image
புத்ரதா ஏகாதசி ➖➖➖➖➖➖ தை மாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி அல்லது சந்தான ஏகாதசி எனப்படும். இந்த நாளில், விரதம் இருந்து, பெருமாளைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறது புராணம்! சுகேது மான் என்ற அரசன் பிள்ளை இல்லாக் குறையை இவ் ஏகாதசி விரத முறையைப் பின்பற்றி நல்ல மகனைப் பெற்றான். தன் நாட்டில் உள்ளோரும் இவ்விரத முறையைப் பின்பற்றச் செய்தான். வம்சாவளி பெருக்கம் தருவது சந்தான ஏகாதசி ஆகும். வெகு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொண்டால் விரைவில் மழலை செல்வம் கிடைக்கும். 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 பெருமாள் தியான ஸ்லோகம்! ➖➖➖➖➖➖➖➖➖➖➖ லக்ஷ்மிபதே கமலநாப சுரேஷ விஷ்ணு வைகுண்ட க்ருஷ்ண மதுசூதன ஸ்ரீ ஸ்ரீனிவாசா ப்ரமண்ய கேசவ ஜனார் தன சக்ரபாணே விஸ்வரூப விபோ மமதேஹி கராவலம்பம். 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 சந்தான கோபால மந்திரம் ! ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்- தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம்கத ! தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம் !! குழந்தை பாக்கியம் வே

63 நாயன்மார்கள்

Image
அறுபத்து மூன்று நாயன்மார்கள்  அறுபத்து‌ மூன்று நாயன்மார்கள்: நாயன்மார் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார்கள்.  நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார்.  அவர் பாடிய நாயன்மார் 60 பேர்.  (63 பேர் அல்ல).  சுவாமிமலைக்குப் படி 60.  ஆண்டுகள் 60.  மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு.  ஒரு நாளைக்கு நாழிகை 60.  ஒரு நாழிகைக்கு வினாடி 60.  ஒரு வினாடிக்கு நொடி 60.  இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான்.  சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார். நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற்சிலைகள் வைக்கப்படுகின்றன.

பிள்ளையார்

Image
பிள்ளையார் அரச மர நிழலும், வன்னி மர நிழலும் ஆனைமுகன் விரும்பி அமரும் இடங்கள். இவை மட்டுமின்றி, மேலும் பல்வேறு மரங்களின் கீழும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை, வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் ? பிள்ளையார் வழிபாடு என்பது தலையில் கொட்டி கொள்ளுதல், காதைப்பிடித்து கொண்டு விக்கி போடுதல், எல்லா காரியங்களின் தொடக்கத்திலும் பிள்ளையார் பிடித்து வைத்து தொடங்குதல் என்பவை எல்லோரும் அறிந்ததே. பொதுவாக பிள்ளையார் குளக்கரையிலும், மரத்தடியிலும் அருள்புரிவதைப் பார்க்கலாம். இதனால் அவர் எழுந்தருளி இருக்கும் இடங்களுக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். வன்னிமரப் பிள்ளையார்: இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வலஞ்சுழியாக வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும். புன்னை மரப் பிள்ளையார்: ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்க

சிவனை வழிபடும் போது

Image
சிவபெருமானை வழிபடும் போது செய்ய கூடாதவை!!! சில பொருட்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும், அவற்றை வைத்து வணங்கும்போது சிவபெருமான் குளிர்ந்து வேண்டுவதை அருளுவார். அதேபோல சிவனுக்கு பிடிக்காத சில பொருட்களை வைத்து வழிபட்டால் நல்லதல்ல. அந்த வகையில் எந்தெந்த பொருட்களை வைத்து சிவபெருமானை வணங்க கூடாது என பார்ப்போம். கேதகி மலரை ஒருபோதும் சிவனுக்கு வைத்து வணங்கக்கூடாது. எக்காரணத்தை கொண்டும் சிவனை கேதகை மலரை கொண்டு வழிபடாதீர்கள். சிவபெருமானுக்கு துளசியை வைத்து வழிபடாதீர்கள் பிறகு ஈசனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சிவபெருமானுக்கு தேங்காயை வைத்து வழிபடலாம் ஆனால் தேங்காய் நீரை படைக்கக்கூடாது.நாம் அருந்த கூடிய பொருளான தேங்காய் தண்ணீரை சிவனுக்கு படைப்பது கூடாது. சிவலிங்கத்தின் மீது மஞ்சளை ஒரு போதும் பூசக்கூடாது. ஏனெனில் மஞ்சள் பண்டைய காலம் முதலே பெண்களின் அழகுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதலால்அதனை புனிதமான சிவபெருமானின் லிங்கத்தினம் மீது பூசக்கூடாது. பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் அதிகரிக்க வேண்டுமென குங்குமத்தை நெற்றியில் திலகமாய் இடுவார்கள். சிவபெருமான் அழிக்கும் கடவுளாவார். எ

ஆன்மீக முத்துக்கள்

Image
ஆன்மீக முத்துக்கள் விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும் . வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும். தினசரி வீட்டை விட்டு கிளம்புமுன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட்/தொட்டி /குளம் பார்த்து செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும். கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும். அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன் 3 மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர தொல்லைகள் நீங்கும் . எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும். வெண்கடுகு ,நாய்க்கடுகு ,மருதாணி விதை ,சாம்பிராணி ,அருகம்புல் வில்வ இலை ,வேப்ப இலை இவைகளை நன்றாக கைய வைத்து துளா

விளக்கு வழிபாடு

Image
விளக்கு வழிபாடு அதனால் கிடைக்கும் பலன்கள் தாமரைப்பூத் தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு  வெயிலில் காயவைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால், முன்வினைக் கர்ம பாபங்கள்  நீங்கும். மறுபிறப்பற்ற நிலை உருவாகும். பஞ்சுத்திரி: பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது  மிகுந்த பயன்தரும். வெள்ளைத்துணி திரி: வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற  முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின்அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு  பயன்படுத்துவது மேலும் பலன்  தரக்கூடியதாகும். சிவப்பு வர்ணத்துணி திரி: சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செ

பிரச்சினைகள் தீர எளிய வழி

Image
குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர எளிய வழி... குடும்பத்தில் அமைதியே இல்லை, எதற்கெடுத்தாலும் பிரச்சனை. இந்த நிலை மாற எளிய பயனுள்ள ஒரு பரிகாரம் உள்ளது. குடும்ப தோஷம் இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும். இதுக்கு ஒரு எளிய பரிகாரம். நெல், அட்சதை, விரலி மஞ்சள், ஒரு ரூபாய் காசு, வெத்தலை பாக்கு, அதோட, உங்க குடும்பத்தில் காலமான மூதாதையர்களோட பெயரை (உங்க ஞாபகத்துல உள்ள வரை) ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொள்ளுங்கள். அனைத்தையும் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில கட்டி, பூஜை அறையில் வைத்து அதற்கு தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி காட்டி, மனசார உங்க இஷ்ட தெய்வத்தை வணங்கி வந்தால் மிக விரைவில் உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக தீர்ந்து சந்தோஷம் பெருகும், அமைதி ஏற்படும்.🌷 வாழ்க வளமுடன்...🙏 You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

நவக்கிரக பரிகாரங்கள்

Image
நவக்கிரகங்களும் எளிய பரிகாரங்களும்: சூரிய பகவான் : பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடம் இருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியபகவானாவார். தினமும் நீராடியவுடன் கிழக்கு திக்கை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் நீரில் நின்று சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு உகந்தது. சந்திர பகவான் : சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் உயர்கிறது. சுக்கிலபட்சம் என்ற வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் மனிதனின் அறிவுத் திறமை குறைகிறது. (இதனால் தான் நல்ல காரியத்தை வளர்பிறையில் துவங்குகிறார்கள்) திங்கட்கிழமையில் உபவாசம் இருந்து ஏதாவது கோவில் ஒன்றில் மாலையில் தீபம் ஏற்றுவது சந்திரதோஷ பரிகாரமாகும். அங்காரகன் : உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் செவ்வாய் என்கின்ற அங்காரகன். பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் என்பர். ஆனால்

போகிப் பண்டிகை

Image
இந்திரனைப் போற்றும் போகிப் பண்டிகை ➖➖➖➖➖➖➖➖➖➖ போகி பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம், சாதாரணமாகவே சூரியோதய காலத்தில் பூஜை, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. தேவதைகளுடைய உஷத் காலமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. அந்த சமயத்தில் பூஜை, பஜனை போன்றவை தவிர வேறெதுவும் செய்யும் பழக்கமே கிடையாது. மார்கழி மாதம் பக்தி செய்வதற்கே உண்டானது. இதற்குபின், தை வந்த பிறகு தான் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பகவத் சம்பந்தமான மங்கள காரியங்கள் மார்கழி மாதத்தில் நடைபெறும். போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்ட