மஹா ப்ரத்யங்கிரா
சக்தியின் உக்கிரமான வடிவம்தான் _மஹா_பிரத்யங்கரா. இந்த பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு கைகளோடு, மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருபவள் பிரத்யங்கிரா தேவி இவளை நம்பி வணங்கும் பக்தர்களை காப்பாற்றி எல்லாவிதமான ஐஸ்வர்யங்களையும் கொடுக்கிறாள் பிரத்யங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள். அகசம்பந்தமான பாவங்களை நீக்கக்கூடியவள் இவள். சம்சார பந்தத்திலிருந்து மீட்டு மோட்சம் தரக்கூடிய தேவதையும் இவளே.அம்பிகையை பைரவரே பூஜித்ததால் அம்பிகை மஹாபைரவபூஜிதா என்று வணங்கப்படுகிறாள். இது பத்மபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பைரவர்களின் அத்தனை வடிவங்களுக்கும் சக்தியாக விளங்கி திருவருள் புரிபவள் பிரத்யங்கிரா. லலிதாம்பிகை திருவருள் புரியும் ஸ்ரீபுரத்தின் 22, 23ம் பிராகாரங்களுக்கு நடுவில் மார்த்தாண்ட பைரவர் வசிப்பதாக சொல்லப்படுகிறது. தேவி