Posts

Showing posts from April, 2021

தீபங்களின் வகைகள்

Image
 தீபங்களின் வகைகள் 🌟 தூபம் 🌟 தீபம் 🌟 அலங்கார தீபம் 🌟 நாகதீபம் 🌟 விருஷ தீபம் 🌟 புருஷா மிருக தீபம் 🌟 சூலதீபம் 🌟 கமடதி (ஆமை) தீபம் 🌟 கஜ (யானை) தீபம் 🌟 வியக்ர (புலி) தீபம் 🌟 சிம்ஹ தீபம் 🌟 துவஜ (கொடிமர ) தீபம் 🌟 மயூர (மயில்)தீபம் 🌟 பூரண கும்ப (5 தட்டு) தீபம் 🌟 நட்சத்திர தீபம் 🌟 மேரு தீபம் விளக்கை குளிர வைத்தல் : 🌟 விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் வாயால் ஊதி அணைக்கக்கூடாது. கையால் வீசியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தைக் கொண்டும் குளிரவைக்கக்கூடாது. புஷ்பத்தை நெருப்பில் கருகக்கூடாது. திரியை உட்பக்கமாக இழுத்துக் குளிர வைப்பதே நன்மை தரும் அல்லது பசும்பால் இரண்டு சொட்டு வைத்து சாந்தி செய்யவும்.

தீபங்கள்

Image
குத்துவிளக்கில் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் 🌟 ஒரு முகம் - மத்திமம் 🌟 இருமுகம் - கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும் 🌟 மூன்று முகம் - குடும்ப விருத்தி உண்டாகும் 🌟 நான்கு முகம் - மனை மற்றும் கால்நடை லாபம் உண்டாகும் 🌟 ஐந்து முகம் - சகல சௌபாக்கியம் உண்டாகும் காமாட்சி விளக்கு : 🌟 காமாட்சி விளக்குஇ எல்லோரின் வீட்டில் இருக்கக்கூடிய விளக்கு ஆகும். புதுமண பெண்ணுக்கு தாயார் வீட்டு சீதனமாக இரண்டு குத்து விளக்கும்இ ஒரு காமாட்சி விளக்கும் கொடுப்பது தமிழர் தங்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சுபப் பொருட்களில் ஒன்றாக காமாட்சி விளக்கு கருதப்படுகிறது. பாவை விளக்கு : 🌟 பாவை என்பது பெண்ணை குறிக்கிறது. அதாவது இறைவனின் திருவுருவங்களுக்கு முன்னால் இரண்டு பெண்கள் விளக்கை ஏந்தி ஒளி கொடுப்பதற்காக அமைக்கப்பட்டு இருக்கும். மாவிளக்கு : 🌟 புரட்டாசி மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளுக்கு போடப்படும் விளக்கு. புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமையும் போடப்படுவது சிறப்பாகும்..🌺

திருமுறை

Image
சைவ மரபில் தெய்வத் தன்மை வாய்ந்த அருள் நூல்கள் பன்னிரண்டு எனப் பெரியோரால் தொகுக்கப்பட்டுள்ளன. அவையே திருமுறை. ராஜராஜசோழன் தமிழுக்குச் செய்த பெரும் தொண்டு, தேவாரத் திருப்பதிகங்களை தேடி, அவை தில்லை நடராஜப் பெருமான் ஆலய அறை ஒன்றில் அடைந்து கிடந்து, கரையானுக்கு இரையாகி வரும் செய்தி அறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்தது! ஆலய தீட்சிதர்கள், தேவாரத்தைப் பாடித் தந்த அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவரும் நேரில் வந்தால்தான் சுவடிகளைத் தருவோம்' என்று வல்லடி வழக்கு' பேசினர். மன்னன் நினைத்திருந்தால் அவர்களை சிறையில் பூட்டி, பாடல்களைப் பறிமுதல் பண்ணியிருக்கலாம்.  தூய சிவபக்தன் ராஜராஜன். தஞ்சைப் பெரிய கோயில் கண்டவன். அதனால் அராஜகத்தில் இறங்காமல், மூவர் திருமேனியையும் கோயிலுக்கு எடுத்த வந்து நிறுத்தி, இதோ, தேவாரம் பாடியோர் வந்துவிட்டார்கள். சுவடியைக் கொடுங்கள்' என்று கேட்டுப் பெற்றான். அதனால் நமக்குக் கிடைத்தது அமிழ்தினும் இனிய ஆன்மிகப் பனுவல் - தேவாரம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் அருளிய தேவாரங்களும், மாணிக்க வாசகர் அருளிய திருவாசகமும், திருச்சிற்றம்பலக் கோவையார், திருமாளிகைத

பச்சை கற்பூரம்

Image
வீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம் பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம். சாமி வைத்திருக்கும் பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. சாதாரணமாக பச்சை கற்பூரத்தை பாறை மீது தடவினால் அந்த பாறையில் விரிசல் உண்டாகும். ஆனால் திருப்பதி பெருமாளின் திருமேனியில் வருடம் முழுவதும் பச்சை கற்பூரம் தடவப்படுகிறது. ஆனால் சிலாதோரணம் என்ற அந்த பாறை மீதும், திருப்பதி பெருமாள் திருமேனியின் மீதும் தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. பச்சை கற்பூரம் தடவப்பட்ட பெருமாளை தரிசிக்க தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர். ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்

சப்த விடங்கத் தலங்கள்

Image
 1) சப்த விடங்கத் தலங்கள் : 1.திருஆரூா் -  வீதிவிடங்கா் - அஜபா நடனம். 2.திருநள்ளாறு -  நகரவிடங்கா்-   உன்மத்தநடனம். 3.திருநாகைக்காரோணம்- சுந்தரவிடங்கா்- அலைபோலவீசிநடனம். 4.திருக்காறாயில் -ஆதிவிடங்கா் - குக்குட நடனம். 5.திருக்கோளிலி -  அவனிவிடங்கா்- பிருங்க நடனம். 6.திருவாய்மூா் -  நீல விடங்கா்- கமல நடனம். 7.திருமறைக்காடு- புவனி விடங்கா்- அம்சபாதநடனம்.    2) அட்ட வீரட்டத் தலங்கள் : 1.திருக்குறுக்கை - காமனை எாித்தது. 2.திருக்கண்டியூா் -  பிரமன் சிரம் கொய்தது. 3.திருப்பறியலூா் -  தக்கன் கேள்வி அழித்தது. 4.திருக்கடவூா்- எமனை உதைத்தது. 5 திருவிற்குடி -  சலந்தராசுரனைச் சங்காித்தது. 6.வழுவூா் - யானையை உாித்தது. 7.திருஅதிகை - திருபுரத்தை எாித்தது. 8.திருக்கோவலூா் -அந்தகாசுரனைச் சங்காித்தது.   3)திருமணக் காட்சி திருத்தலங்கள் : 1.திருஆலவாய் - ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரா். 2. திருமணஞ்சோி -  ஸ்ரீ கல்யாணசுந்தரா். 3.திருவீழிமிழலை - ஸ்ரீவீழிஅழகேசா். 4.திருநல்லம் - ஸ்ரீஉமாமகேஸ்வரா். 4.திருப்பந்தனைநல்லூா் - ஸ்ரீபசுபதிஸ்வரா்.   4)சிவராத்தாி விசடேத் தலங்கள் : 1.திருஇராமேஸ்வரம். 2. திருக்காளத்தி. 3.திருக்கோ