Posts

துவாதச நாமங்கள்

Image
துன்பம் தீர்க்கும் துவாதச நாமங்கள் ! பிரமாண்ட புராணம் வாராஹி தேவியின் மகிமைகளை விளக்குகிறது. பண்டாசுர வதத்துக்கு லலிதாம்பிகை புறப்படும் போது தேவி வாராஹியும் தன் கிரி சக்கரத்தில் எழுந்தருளினாள். அப்போது சுற்றியிருந்த தேவதைகள் வாராஹியை துவாதச நாமங்கள் சொல்லித் துதித்தனர். துவாதசம் என்றால் பன்னிரண்டு. இந்தப் பன்னிரண்டு நாமங்களைச் சொல்லித் துதித்து அன்னையை வழிபட்டால் சகல காரியங்களும் ஸித்தியடையும் என்கிறது பிரமாண்ட புராணம்.  1. பஞ்சமி, 2. தண்டநாதா, 3. சங்கேதா, 4. சமயேஸ்வரி, 5 சமய சங்கேதா, 6. வாராஹி, 7. போத்ரினி, 8. சிவா, 9. வார்த்தாளி, 10. மகா சேனா, 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி, 12. அரிக்கினி   என்பன அந்த நாமங்கள். இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி அன்றும் அன்னையின் சந்நிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க, தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால் கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வாராஹி. அன்னையை பஞ்சமி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது நம்பி

ஜென்ம நட்சத்திரக் குறியீடுகள்

Image
வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் Add caption ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன. அன்றாட வாழ்வில் அனைவரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறுவதில்லை. முயற்சிகள் தவறினாலும், முயற்சிக்க தவறாத மனதுடனும், பல்வேறு கேள்விகளுடனும் பலர் பல்வேறு வழிகளில் உழைத்துக்கொண்டுள்ளனர். வெற்றிக்கு தனி வழி வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை. உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது

தேய்பிறை அஷ்டமி

Image
தேய்பிறை அஷ்டமி சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது.  தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். ஸ்வானத்வஜாய வித்மஹே  சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ; பைரவ ப்ரசோதயாத்: விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை தரித்ததோர்  கோல கால வைரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்  சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச்செல்வனாரே!...                                                                    - திருநாவுக்கரசர். - தலம் திருச்சேறை ( நான்காம் திருமுறை. திருப்பதிக எண் : 73/6 ) தேவாரத்தில் வைரவரின் திருப்பெயர் பயின்று வரும் ஒரே திருப்பாடல் இது... &

திருமண சடங்குகள், தகவல்கள்

சனாதன  தர்மத்தின் அடிப்படையில் இந்திய கலாச்சாரத்தில், நமது பாரம்பரிய  திருமண சடங்குகள் பற்றிய முழூ தகவல்கள் உள்ளது உள்ளபடியே இந்து திருமண சமஸ்கிருத  மந்திரங்களின் தமிழ் அர்த்தம். முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை, எனப்படும்  #கணபதிபூஜை. அடுத்ததாக #நவக்கிரகபூஜை. பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள் அடுத்தது #சங்கல்பம்.  திருமணத்தின் மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். #பாதபூஜை தாய் தந்தையரின் பாதங்களை மணமகன் மற்றும் மணமகள் நீரால் கழுவி பாத பூஜை நடைபெறுகிறது.  #கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’ #உறுதிமொழி மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்: ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என

கால பைரவர் அஷ்டகம்

Image
காலபைரவ அஷ்டகம் தேவராஜ ஸேவ்யமாந பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞ ஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம்  நாரதாதி யோகிவ்ருந்த வந்திதம் திகம்பரம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே. பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம் நீலகண்ட மீப்ஸிதார்த தாயகம் த்ரிலோசனம் காலகாலமம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம் காசிகா புராதிநாத காலபைரவம் பஜே. சூலடங்கபாச தண்டபாணி மாதிகாரணம் ச்யாமகாய மாதிதேவ மக்ஷரம் நிராமயம் பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவ ப்ரியம் காசிகா புராதிநாத காலபைரவம் பஜே. புக்திமுக்தி தாயகம் ப்ரசஸ்த சாரு விக்ரஹம் பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்த லோக விக்ரஹம் வினிக்வணந் மனோஜ்ஞஹேம கிங்கிணீ லஸத்கடிம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே. தர்மஸேது பாலகம் த்வதர்ம மார்கvநாசகம் கர்மபாச மோசகம் ஸுசர்ம தாயகம் விபும் ஸ்வர்ண வர்ணசேஷ பாசசோபிதாங்க மண்டலம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே. ரத்னபாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம் நித்யமத் விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம் ம்ருத்யு தர்ப நாசனம் கராள தம்ஷ்ட்ர மோக்ஷணம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே. அட்டஹாஸ பிந்நபத்ம  ஜாண்ட கோச ஸந்ததிம் த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர சாஸனம் அஷ்டஸ

சிரஞ்சீவி

Image
💫🌹 சிரஞ்சீவி என்றால் என்ன அர்த்தம்? 💫🌹 அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை ‘சிரஞ்சீவி’ என்பர். அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர்.  மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள். இந்த சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். பின்னே இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்? எமனுக்கு பயந்து 12 வயதே நிரம்பிய இந்த பாலகன் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், பின்னர் சிவபெருமான் பிரத்யட்சமாகி காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா? இதன் பின்னணியில் நமக்கெல்லாம் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது. மார்கண்டேயனுக்கு 12 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும் அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும். ஆகையால் மகனை காக்க விரும்ப

பாதமும் செல்வ வசியமும்

Image
"பாதமும் !! செல்வ வசியமும் !!!" நம்முடைய பாதமே செல்வம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி பாகம் ஆகும். இந்த பாதத்திற்கு மட்டும் தனி மரியாதை உண்டு, நம் கால் மற்றவர் மேல் பட்டு விட்டாலே அவரை தொட்டு வணங்குவோம், அவ்வாறு செய்யாமல் அவமதிப்பாய் இருந்தால் மூதேவி நம்மை அண்டிவிடும், லட்சுமி விலகி நம் கால் யார் மீது பட்டதோ அவர்களிடம் சென்று விடுவார்கள். என் சாண் உடம்பிற்கு சிரசே தலைமை என்றாலும் பாதமே பூஜையை பெரும் சிறப்பு பெற்றதாகும், இந்த பாதம் மூவுலகையும் அளந்த பெருமையும். பாதம் உலகை ஆண்ட பெருமையும் புராணங்களில் படித்திருப்போம், ஆக இந்த பாதத்திற்கு இவ்வளவு மரியாதை ஏனெனில் அதுவே செல்வம் தரும் யோகம் தரும் மகாலட்சுமி குடிகொள்ளும் பாகமாகும். பசுவாய் இருந்தாலும் அதன் பாதத்தில் லட்சுமி குடி கொள்கிறாள், புதுமனை கிரஹ பிரவேஷத்தின் போது பசுவின் பாதம் படவே முதலில் இல்லத்திற்கு பசு கன்றை அழைத்து வருவார்கள், அதே போல் புதுமணப்பெண் புகுந்த வீட்டிற்கு வரும் போது தலைவாயிற் படியில் படி நெல்லை வைத்து கையிருக்க காலால் உள்புறமாக தட்டி நெல்லை தரையில் கொட்ட வைத்து உள்செல்லும் பழக்கமும் உள்ளது, ஏன் இதை கையால

மந்திரங்கள் பற்றிய விளக்கம்

Image
மந்திரங்கள் பற்றிய விளக்கம் வகைகள், மற்றும் மந்திரங்களை தந்திரத்தால் பெருக்கும் வழிமுறைகள் 🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉 மந்திரத்தையும் யந்திரத்தையும் செயல்படுத்தும் திறனே தந்திரம். அலை பாயும் மனதில் எழும் எண்ணங்களை நிறுத்தவில்லை என்றால் அது புலன் வழியாகச் செயல் வடிவம் பெறும். எனவே அதைச் சரி செய்ய வேண்டும். மனம் ஆகிய எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தும் திறன் மந்திரங்களுக்கு உண்டு. மனம் ஒரு நிலைப்பட்டால் அது தவமாகிய செயலாகிவிடும். ஆக மனமாகிய எண்ணம், மந்திரமாகிய சொல், தவமாகிய செயல் மூன்றும் நேர் கோட்டில் வரும் போது யோகம் ஜொலிக்கும். இதை வேறு விதமாகவும் சிந்திக்கலாம். அதாவது மந்திரங்கள் மூன்று வகைப்படும். 1.அட்சராந்தக மந்திரங்கள், 2.அட்சராப்ய மந்திரங்கள், 3.பீஜ மந்திரங்கள் 1.அட்சராந்தக மந்திரங்கள்: சப்தத்தில் இருந்து மொழி வந்தது, மொழியிலிருந்து மந்திரம் வந்தது. மனதுக்கு திறம் தருவது மந்திரம். அட்சராந்தகம் என்பது எழுத்து இல்லாமல் காலகாலமாக காது விட்டு காது வழி வழியாக வந்து கொண்டிருப்பது. 2.அட்சராப்ய மந்திரங்கள்: அட்சராப்யம் என்பது எழுத்தில் உள்ளது(சுப்ரபாதம், கா

பீஜாட்சரம், பஞ்சாட்சரம் விளக்கம்

Image
பீஜாட்சரம், பஞ்சாட்சரம் வித்தியாசம் என்ன? 🕉🕉🕉🕉🕉🕉🕉 ‘அக்ஷரம்’ என்றால் எழுத்து, பஞ்ச என்றால் ஐந்து ஐந்து எழுத்துள்ள மந்திரம் பஞ்சாக்ஷரம் எனப்படும் அஷ்ட+அக்ஷரம் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துள்ள மந்திரம் அஷ்டாக்ஷரம் எனப்படும் இவ்வாறே மந்திரங்களிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டே அந்த மந்திரங்களைக் குறிப்பிடுவது உண்டு. மந்திரங்கள் மூலம் முழுமையான பலனைப் பெற வேண்டுமானால், அவை ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். என்பதால் அவைகளைக் குறிப்பிட, அஷ்டாக்ஷரம் பஞ்சாக்ஷரம் என்பதாக எழுத்துக்களின் எண்ணிக்கையோ அல்லது மந்திரத்தால் வழிபடப்படும் (மகா கணபதி, ஷண்முக, நாராயண என்று) தெய்வத்தின் பெயர்களோ பயன்படுத்தப்படுகிறது. ‘பீஜம்’ என்றால் விதை எனப் பொருள். அக்ஷரம் என்றால் எழுத்து, பீஜ+அக்ஷரம் என்றால் விதை போன்ற எழுத்து எனப்பொருள். அதாவது, ஒரே ஒரு எழுத்தில் அமைந்துள்ள மந்திரத்தைக் குறிக்கே பீஜாக்ஷரம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரே ஒரு எழுத்தில் இந்த பீஜாக்ஷர மந்திரம் அமைந்திருந்தாலும் மிகப்பெரும் சக்தி இதனுள் அடங்கியிருக்கும் எவ்வாறு சின்னஞ்சிறிய (ஆல) விதைக்குள், மிகப்பெரும் மரத்

பைரவர் வழிபாடு

Image
*பைரவர் வழிபாடு. (ராசிகள் வாரியாக, கிழமை  வாரியான பைரவர் வழிபாடு)*   சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் பைரவர். இவர் வைரவர் என்றும் அழைக்கப்படுவார். கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவ கிரகங்களையும், காலத்தையும் கட்டுப் படுத்துபவராகவும் கூறப்படுபவர் பைரவர்.  *பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை.*  *(சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிற்று கிழமையில் வழிபடுவது சிறப்பு)* தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மண மகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இராகு காலத்தில் (4.30-6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும்,