பீஜாட்சரம், பஞ்சாட்சரம் விளக்கம்

பீஜாட்சரம், பஞ்சாட்சரம் வித்தியாசம் என்ன?


🕉🕉🕉🕉🕉🕉🕉
‘அக்ஷரம்’ என்றால் எழுத்து, பஞ்ச என்றால் ஐந்து ஐந்து எழுத்துள்ள மந்திரம் பஞ்சாக்ஷரம் எனப்படும் அஷ்ட+அக்ஷரம் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துள்ள மந்திரம் அஷ்டாக்ஷரம் எனப்படும் இவ்வாறே மந்திரங்களிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டே அந்த மந்திரங்களைக் குறிப்பிடுவது உண்டு. மந்திரங்கள் மூலம் முழுமையான பலனைப் பெற வேண்டுமானால், அவை ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். என்பதால் அவைகளைக் குறிப்பிட, அஷ்டாக்ஷரம் பஞ்சாக்ஷரம் என்பதாக எழுத்துக்களின் எண்ணிக்கையோ அல்லது மந்திரத்தால் வழிபடப்படும் (மகா கணபதி, ஷண்முக, நாராயண என்று) தெய்வத்தின் பெயர்களோ பயன்படுத்தப்படுகிறது.

‘பீஜம்’ என்றால் விதை எனப் பொருள். அக்ஷரம் என்றால் எழுத்து, பீஜ+அக்ஷரம் என்றால் விதை போன்ற எழுத்து எனப்பொருள். அதாவது, ஒரே ஒரு எழுத்தில் அமைந்துள்ள மந்திரத்தைக் குறிக்கே பீஜாக்ஷரம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரே ஒரு எழுத்தில் இந்த பீஜாக்ஷர மந்திரம் அமைந்திருந்தாலும் மிகப்பெரும் சக்தி இதனுள் அடங்கியிருக்கும் எவ்வாறு சின்னஞ்சிறிய (ஆல) விதைக்குள், மிகப்பெரும் மரத்தை உருவாக்கும் திறன் உள்ளடங்கி இருக்கிறதோ, அவ்வாறே ஒரே ஒரு எழுத்துள்ள பீஜாக்ஷரம் என்னும் மந்திரத்தில் மிகப்பெரும் சக்தியும், திறனும் உள்ளடங்கியுள்ளது ஆகவே மற்ற மந்திரங்களைவிட பீஜாக்ஷர (ஒரெழுத்து) மந்திரம் அதிக சக்தி வாய்ந்தது.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை