திருமண சடங்குகள், தகவல்கள்
சனாதன தர்மத்தின் அடிப்படையில் இந்திய கலாச்சாரத்தில், நமது பாரம்பரிய திருமண சடங்குகள் பற்றிய முழூ தகவல்கள் உள்ளது உள்ளபடியே இந்து திருமண சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ் அர்த்தம். முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை, எனப்படும் #கணபதிபூஜை. அடுத்ததாக #நவக்கிரகபூஜை. பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள் அடுத்தது #சங்கல்பம். திருமணத்தின் மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். #பாதபூஜை தாய் தந்தையரின் பாதங்களை மணமகன் மற்றும் மணமகள் நீரால் கழுவி பாத பூஜை நடைபெறுகிறது. #கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’ #உறுதிமொழி மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்: ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என