Posts

பிரச்சினைகள் தீர எளிய வழி

Image
குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர எளிய வழி... குடும்பத்தில் அமைதியே இல்லை, எதற்கெடுத்தாலும் பிரச்சனை. இந்த நிலை மாற எளிய பயனுள்ள ஒரு பரிகாரம் உள்ளது. குடும்ப தோஷம் இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும். இதுக்கு ஒரு எளிய பரிகாரம். நெல், அட்சதை, விரலி மஞ்சள், ஒரு ரூபாய் காசு, வெத்தலை பாக்கு, அதோட, உங்க குடும்பத்தில் காலமான மூதாதையர்களோட பெயரை (உங்க ஞாபகத்துல உள்ள வரை) ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொள்ளுங்கள். அனைத்தையும் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில கட்டி, பூஜை அறையில் வைத்து அதற்கு தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி காட்டி, மனசார உங்க இஷ்ட தெய்வத்தை வணங்கி வந்தால் மிக விரைவில் உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக தீர்ந்து சந்தோஷம் பெருகும், அமைதி ஏற்படும்.🌷 வாழ்க வளமுடன்...🙏 You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

நவக்கிரக பரிகாரங்கள்

Image
நவக்கிரகங்களும் எளிய பரிகாரங்களும்: சூரிய பகவான் : பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடம் இருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியபகவானாவார். தினமும் நீராடியவுடன் கிழக்கு திக்கை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் நீரில் நின்று சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு உகந்தது. சந்திர பகவான் : சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் உயர்கிறது. சுக்கிலபட்சம் என்ற வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் மனிதனின் அறிவுத் திறமை குறைகிறது. (இதனால் தான் நல்ல காரியத்தை வளர்பிறையில் துவங்குகிறார்கள்) திங்கட்கிழமையில் உபவாசம் இருந்து ஏதாவது கோவில் ஒன்றில் மாலையில் தீபம் ஏற்றுவது சந்திரதோஷ பரிகாரமாகும். அங்காரகன் : உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் செவ்வாய் என்கின்ற அங்காரகன். பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் என்பர். ஆனால்

போகிப் பண்டிகை

Image
இந்திரனைப் போற்றும் போகிப் பண்டிகை ➖➖➖➖➖➖➖➖➖➖ போகி பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம், சாதாரணமாகவே சூரியோதய காலத்தில் பூஜை, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. தேவதைகளுடைய உஷத் காலமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. அந்த சமயத்தில் பூஜை, பஜனை போன்றவை தவிர வேறெதுவும் செய்யும் பழக்கமே கிடையாது. மார்கழி மாதம் பக்தி செய்வதற்கே உண்டானது. இதற்குபின், தை வந்த பிறகு தான் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பகவத் சம்பந்தமான மங்கள காரியங்கள் மார்கழி மாதத்தில் நடைபெறும். போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்ட

நரசிம்மர் மந்திரம்

Image
நரசிம்மர் மந்திரம் நடக்காததையும் நடத்தி காட்டும்...!! நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தடைகள், இடைஞ்சல் என்று! தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான். நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள், ஆனால் ஏதோ தடங்கள், இடைஞ்சல் என்று! தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான் இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது. “யஸ்ப அபவத் பக் தஜன ஆர்த்திஹந்து பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி ந்ருஸிம் ஹம் சரணம் பிரபத்யே” You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

ஸ்ரீ அனுமன் ஜெயந்தி

Image
ஸ்ரீ அனுமன் ஜெயந்தி நம் தமிழ் மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி மாதம். கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது “மூலம்” நட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அன்றைய தினமே அனுமன் ஜெயந்தியாக நாடெங்கிலும் கொண்டாடப்படுகின்றோம் . ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை “ராம” நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். அனுமனுக்கு செந்தூரம் ஏன்!! ராம, ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதையை பார்த்து செய்தியை கூற அனுமன் சென்ற

ராகு காலம் எமகண்டம்

Image
ராகு காலம் எமகண்டம் ராகு காலம் என்பது போல் கேது காலம் ஏன் இல்லை? ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது. அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம். ராகு காலம், எமகண்டம் என்பது என்ன என்றால், அந்த நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். விஞ்ஞானப்படி, ராகு கேதுவிற்கு என தனியாக பாதை கிடையாது. நீள் வட்ட சுற்றுப்பாதையும் கிடையாது. மற்ற கிரகங்கள் வேகமாக செல்லும்போது அதில் இருந்து வரும் தூசுகள் தான் ஒன்று சேர்ந்து ராகுவும் கேதுவும் உண்டாகின்றன. அதாவது ஒவ்வொரு கிரகத்தில் இருந்து வெளிவரும் தூசுகள் ராகுவாகவும், கேதுவாகவும் மாறும் நேரத்தைக் கணித்துத்தான் ராகு காலம், கேது காலம் என்று சொல்கிறார்கள். செவ்வாய், வெள்ளி ராகுகாலம் இரண்டும் ஏன் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது? செவ்வாய் கிரகத்துக்கும் ராகு கிரகத்துக்கும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பது நன்கு புலப்படும், ஆகவேதான் செவ்வாய்க்கிழமையன்று ராகு கிரகத்துக்கான ப்ரீ

27 நட்சத்திரங்களின் பிற பெயர்கள்

Image
27 நட்சத்திரங்களின் பிற பெயர்கள் ➖➖➖➖➖➖➖➖➖ அசுவினி = பரி, புரவி, வாசி, ஐப்பசி, இரலை, புரவி, ஏறு, யாழ், தலை நாள், மருத்து நாள், சென் பூதம், குதிரை பரணி = காடுகிழவோன், தாழி, அடுப்பு, முக்கூட்டு, வேழம், சோறு, பகடு, பகலவன், தாசி கார்த்திகை = அறுமீன், அழல், ஆரல், அளக்கர், எரி, அங்கி, ஆல், ஆறாமீன், அறுவாய், நாவிதன், அளகு, இறால், நாடன், வாணன், தழல் ரோகிணி = பண்டி, மாட்டு வண்டி, உருள், வையம், ஊறல், பிரமநாள், சதி, அயன் நாள், தேர், விமானம், சகடம் (அகம் 86), மிருகசீரிடம் = மான் தலை, மாழ்கு, மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன் திருவாதிரை = செங்கை, யாழ், சடை, இறைநாள் (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை,ஈசன் தினம் புனர்பூசம் = கழை, கரும்பு, ஆவனம், ஏரி, அதிதி நாள், பிண்டி, மூங்கில், பாலை பூசம் = கொடிறு, வண்டு, காற்குளம், வியாழன் நாள் (புஷ்ய, திஷ்ய என்ற பெயர்கள் உண்டு), அண்டம், குருவின் நாள் ஆயில்யம் (ஆஸ்லேஷா) = அரவு நாள், கௌவை, பாம்பு மகம் = வேள்வி, வேட்டுவன், கொடுங்கம், வாய்க்கால், மாசி, முதலில் வரும் சனி, பிதிர் நாள், எழுவாயெழுஞ்சனி (திவாகர நிகண்டு) பூரம் (பூர்வ பல்குனி) = எலி,

27 நட்சத்திரத்திற்குரிய தெய்வங்கள்

Image
ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்களை வணங்கிப் பயனடையலாம்.. 01. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி 02. பரணி – ஸ்ரீ துர்கா தேவி 03. கார்த்திகை – ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்) 04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணர். (விஷ்ணு பெருமான்) 05. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்) 06. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான் 07. புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்) 08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) 09. ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 10. மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) 11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி 12. உத்திரம் – ஸ்ரீ மகாலெட்சுமி 13. ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி 14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான். 17. அனுசம் - ஸ்ரீ லெட்சுமி நாராயணர். 18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) 19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர் 20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) 21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான். 22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ண

பைரவர் வழிபாடு பலன்கள்

Image
பைரவர் வழிபாடும் – தீரும் பிரச்சனைகளும்... நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்க பைரவருக்கு தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கி, நெய்தீபம் ஏற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். குழந்தைப் பேறு கிடைக்க தேய்பிறை அஷ்டமி திதியில் நெய் தீபம் ஏற்றி பைரவருக்கு சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்து ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். வறுமை நீங்க நெய்தீபம் ஏற்றி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பைரவருக்கு வில்வம், அரளி பூவினால் அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கும். திருமணம் நடக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக் கிழமைகளில் 6 எண்ணை தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைபட்ட திருமணம் கை கூடும். You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

பைரவரின் உடலில்

Image
பைரவரின் உடலில் அங்கங்களாக உள்ள 12 ராசிகள் பிருஹத்ஜாதகம் என்ற நூலில் பனிரெண்டு ராசிகளும் பைரவருடைய உடலின் அங்கங்களாக இருப்பதாகவும், அவை மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கைகள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, துலாம்-புட்டங்கள், விருச்சிகம்-மர்ம ஸ்தானங்கள், தனுசு-தொடை, மகரம்-முழங்கால்கள், கும்பம்-காலின் கீழ்பகுதி, மீனம்-கால்களின் அடிப்பாகம் என பனிரெண்டு ராசிகளும் நிறைந்துள்ளன. மேலும் பைரவரின் சேவர்களாக நவக்கோள்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய அன்பர். எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்த கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார். You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks