Posts

Showing posts from April, 2020

சிரஞ்சீவி

Image
💫🌹 சிரஞ்சீவி என்றால் என்ன அர்த்தம்? 💫🌹 அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை ‘சிரஞ்சீவி’ என்பர். அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர்.  மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள். இந்த சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். பின்னே இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்? எமனுக்கு பயந்து 12 வயதே நிரம்பிய இந்த பாலகன் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், பின்னர் சிவபெருமான் பிரத்யட்சமாகி காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா? இதன் பின்னணியில் நமக்கெல்லாம் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது. மார்கண்டேயனுக்கு 12 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும் அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும். ஆகையால் மகனை காக்க விரும்ப

பாதமும் செல்வ வசியமும்

Image
"பாதமும் !! செல்வ வசியமும் !!!" நம்முடைய பாதமே செல்வம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி பாகம் ஆகும். இந்த பாதத்திற்கு மட்டும் தனி மரியாதை உண்டு, நம் கால் மற்றவர் மேல் பட்டு விட்டாலே அவரை தொட்டு வணங்குவோம், அவ்வாறு செய்யாமல் அவமதிப்பாய் இருந்தால் மூதேவி நம்மை அண்டிவிடும், லட்சுமி விலகி நம் கால் யார் மீது பட்டதோ அவர்களிடம் சென்று விடுவார்கள். என் சாண் உடம்பிற்கு சிரசே தலைமை என்றாலும் பாதமே பூஜையை பெரும் சிறப்பு பெற்றதாகும், இந்த பாதம் மூவுலகையும் அளந்த பெருமையும். பாதம் உலகை ஆண்ட பெருமையும் புராணங்களில் படித்திருப்போம், ஆக இந்த பாதத்திற்கு இவ்வளவு மரியாதை ஏனெனில் அதுவே செல்வம் தரும் யோகம் தரும் மகாலட்சுமி குடிகொள்ளும் பாகமாகும். பசுவாய் இருந்தாலும் அதன் பாதத்தில் லட்சுமி குடி கொள்கிறாள், புதுமனை கிரஹ பிரவேஷத்தின் போது பசுவின் பாதம் படவே முதலில் இல்லத்திற்கு பசு கன்றை அழைத்து வருவார்கள், அதே போல் புதுமணப்பெண் புகுந்த வீட்டிற்கு வரும் போது தலைவாயிற் படியில் படி நெல்லை வைத்து கையிருக்க காலால் உள்புறமாக தட்டி நெல்லை தரையில் கொட்ட வைத்து உள்செல்லும் பழக்கமும் உள்ளது, ஏன் இதை கையால

மந்திரங்கள் பற்றிய விளக்கம்

Image
மந்திரங்கள் பற்றிய விளக்கம் வகைகள், மற்றும் மந்திரங்களை தந்திரத்தால் பெருக்கும் வழிமுறைகள் 🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉 மந்திரத்தையும் யந்திரத்தையும் செயல்படுத்தும் திறனே தந்திரம். அலை பாயும் மனதில் எழும் எண்ணங்களை நிறுத்தவில்லை என்றால் அது புலன் வழியாகச் செயல் வடிவம் பெறும். எனவே அதைச் சரி செய்ய வேண்டும். மனம் ஆகிய எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தும் திறன் மந்திரங்களுக்கு உண்டு. மனம் ஒரு நிலைப்பட்டால் அது தவமாகிய செயலாகிவிடும். ஆக மனமாகிய எண்ணம், மந்திரமாகிய சொல், தவமாகிய செயல் மூன்றும் நேர் கோட்டில் வரும் போது யோகம் ஜொலிக்கும். இதை வேறு விதமாகவும் சிந்திக்கலாம். அதாவது மந்திரங்கள் மூன்று வகைப்படும். 1.அட்சராந்தக மந்திரங்கள், 2.அட்சராப்ய மந்திரங்கள், 3.பீஜ மந்திரங்கள் 1.அட்சராந்தக மந்திரங்கள்: சப்தத்தில் இருந்து மொழி வந்தது, மொழியிலிருந்து மந்திரம் வந்தது. மனதுக்கு திறம் தருவது மந்திரம். அட்சராந்தகம் என்பது எழுத்து இல்லாமல் காலகாலமாக காது விட்டு காது வழி வழியாக வந்து கொண்டிருப்பது. 2.அட்சராப்ய மந்திரங்கள்: அட்சராப்யம் என்பது எழுத்தில் உள்ளது(சுப்ரபாதம், கா

பீஜாட்சரம், பஞ்சாட்சரம் விளக்கம்

Image
பீஜாட்சரம், பஞ்சாட்சரம் வித்தியாசம் என்ன? 🕉🕉🕉🕉🕉🕉🕉 ‘அக்ஷரம்’ என்றால் எழுத்து, பஞ்ச என்றால் ஐந்து ஐந்து எழுத்துள்ள மந்திரம் பஞ்சாக்ஷரம் எனப்படும் அஷ்ட+அக்ஷரம் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துள்ள மந்திரம் அஷ்டாக்ஷரம் எனப்படும் இவ்வாறே மந்திரங்களிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டே அந்த மந்திரங்களைக் குறிப்பிடுவது உண்டு. மந்திரங்கள் மூலம் முழுமையான பலனைப் பெற வேண்டுமானால், அவை ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். என்பதால் அவைகளைக் குறிப்பிட, அஷ்டாக்ஷரம் பஞ்சாக்ஷரம் என்பதாக எழுத்துக்களின் எண்ணிக்கையோ அல்லது மந்திரத்தால் வழிபடப்படும் (மகா கணபதி, ஷண்முக, நாராயண என்று) தெய்வத்தின் பெயர்களோ பயன்படுத்தப்படுகிறது. ‘பீஜம்’ என்றால் விதை எனப் பொருள். அக்ஷரம் என்றால் எழுத்து, பீஜ+அக்ஷரம் என்றால் விதை போன்ற எழுத்து எனப்பொருள். அதாவது, ஒரே ஒரு எழுத்தில் அமைந்துள்ள மந்திரத்தைக் குறிக்கே பீஜாக்ஷரம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரே ஒரு எழுத்தில் இந்த பீஜாக்ஷர மந்திரம் அமைந்திருந்தாலும் மிகப்பெரும் சக்தி இதனுள் அடங்கியிருக்கும் எவ்வாறு சின்னஞ்சிறிய (ஆல) விதைக்குள், மிகப்பெரும் மரத்

பைரவர் வழிபாடு

Image
*பைரவர் வழிபாடு. (ராசிகள் வாரியாக, கிழமை  வாரியான பைரவர் வழிபாடு)*   சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் பைரவர். இவர் வைரவர் என்றும் அழைக்கப்படுவார். கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவ கிரகங்களையும், காலத்தையும் கட்டுப் படுத்துபவராகவும் கூறப்படுபவர் பைரவர்.  *பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை.*  *(சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிற்று கிழமையில் வழிபடுவது சிறப்பு)* தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மண மகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இராகு காலத்தில் (4.30-6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும்,

திருவிளக்கு வழிபாடு

Image
திருவிளக்கு வழிபாடு என்பது இந்து மதத்தில் இடம்பெறும் ஒரு வழிபாட்டு முறையாகும். இறைவனை ஒளி வடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் வழிபாடு திருவிளக்கு வழிபாடாகும். வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும் ஏற்ற நாள் நேரம் பொதுவாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த நற்பலன்களைத் தரவல்லது என நம்பப்படுகிறது. தமிழ் மாதங்களில் 12 மாதங்களிலும் திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும். அந்தந்த மாதங்களில் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும் பின்பற்ற வேண்டிய முறைகள் திருவிளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும். திருவிளக்கு வழிபாட்டின் போது எவர்சில்வர் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; பின்னமடைந்த (உடைந்த, கீறல் விழுந்த) விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. திருவிளக்கேற்றும் பலன்கள் தொகு ஒரு முகம் முதல் ஐந்து முகம் வரை ஏற்றினால் அதற்குரிய நற்பலன்கள் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும். திருவிளக்கில் பொட்டு வைக்கும் முறை திருவிளக்கு வழி

வேதம் என்ற சொல்

Image
வேதம் என்ற சொல்லுக்கு உணர்த்துதல் என்று அர்த்தம்.! 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉☸                                                                        பரப்ரும்மத்தை உணர்த்துவதனாலே அது வேதம்.  இதையே தமிழில் “மறை” என்கிறோம். மறைப்பதனாலே அதற்கு மறை என்று பொருள். சமஸ்கிருத அர்த்தத்துக்கு  தமிழ் அர்த்தம் முரணாக நமக்கு தோன்றுகிறதல்லவா? இந்த முரண்பாடு கண்டு நாம் பிரமித்துப் போய்விடக் கூடாது. ஏனென்றால் சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டதைத்தான் தமிழ் மேலும் வலியுறுத்திச் சொல்கிறது. பரப்பிரும்மத்தை உணர்த்துவதனால் வேதம். பரப்பிரும்மத்தைத் தன்னுள்ளே மறைத்து வைத்ருப்பதனாலே அது மறை. வேதமானது யாருக்கு மறைக்கிறது யாருக்கு பரப்பிரும்மத்தைக் காட்டுகிறது? ஆசார்ய கடாக்ஷம் அற்றவருக்கு மறைக்கிறது.  ஆசார்ய கடாக்ஷம் பெற்றவருக்கு பரப்பிரும்மத்தை அதுவே உணர்த்துகிறது. பளிங்கு கற்களால் தயார் பண்ணப்பட்ட திவ்யமான ஒரு மாளிகையிலே நான்கு பக்கமும் தேதீப்யமாய் விளக்குகளை ஏற்றி வைத்து, அந்த மாளிகைக்கு இடையிலே நவநிதிகளையும் கொட்டினால், அது எப்படி தகதகாயமாய்ப் பிரகாசிக்குமோ, எல்லோருக்கும் எப்படிப் பளீரென்று புலப்படுமோ

தங்கம் யாரிடம் தங்கும்

Image
ஜோதிட ரீதியாக தங்கம் யாருக்குத் தங்காமல் போகும்! தங்கம் சேரும் யோகமும், தங்கம் தங்காமல் போகும் அவயோகமும் ஜாதக ரீதியாக யாருக்கு உண்டு என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். மற்ற உலோகங்களை விட மஞ்சள் உலோகமான தங்கம் என்றால் அதற்குத் தனி மதிப்பு உண்டு. நவக்கிரங்களில் முழு முதல் சுபக்கிரகமாக விளங்குபவர் குரு. இவருக்குப் பிடித்த உலோகம் தங்கம். ஒருவர் ஜாதகத்தில் குரு பலமிக்க இடத்தில் இருந்தால், அவருக்கு எக்கச்சக்கமாகப் பொன்னும் பொருளும் சேருமாம். *தங்கம் யாருக்கு அதிகம் சேரும்…* ஜாதகத்தில் குருவானவர் லக்னத்துக்கோ சந்திர ராசிக்கோ 1, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் இருந்தாலும் அவருக்கு தங்கச் சேர்க்கை உண்டாகும். குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் ஒன்றில் பிறந்து குரு பலம் பெற்று இருந்தால் தங்கம் சேரும். ஒருவர் ஜாதகத்தில் 4,7,10 ஆகிய இடங்களுக்கு குரு அதிபதியாகி, கேந்திராதிபதி தோஷம் பெற்று இருந்தாலும் 5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் வலுத்திருக்கும் போது கேந்திராதிபத்திய தோஷம் விலகி பொன், பொருள் சேர்க்கை அதிகம் உண்டாகும். குருவுக்கு நட்பு கிரகங்களான

திதிகள்

Image
எந்தெந்த திதிகளில் என்ன செய்யலாம்? 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 சூரிய சந்திர சுழற்சியை உணர்த்தும் கணக்கு திதி ஆகும். சந்திரனின் சஞ்சாரம், சூரியனின் நிலை இவற்றை அடிப்படையாக கொண்டு உலகம் இயங்குகிறது. சூரியனும், சந்திரனும் அருகருகில் வரும் நாள் அமாவாசை. இவை இரண்டும் நெடுந்தொலைவு செல்லும் நாள் பவுர்ணமி. திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். ஹிந்துக்களின் தமிழ் நாட்காட்டியின் படி, ஒவ்வொரு மாதமும், 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும். அமாவாசையிலிருந்து பவுர்ணமி வரை சுக்ல பட்சம் எனவும், பவுர்ணமியிலிருந்து அமாவாசை வரை கிருஷ்ண பட்சம் எனவும் கணக்கிடப்படுகிறது. எந்தெந்த திதியில் எதை செய்யலாம் என்றும் சோதிடவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். *நத்தை திதி* பிரதமை, சஷ்டி, ஏகாதசி ஆகிய மூன்று திதிகளும் நத்தை திதி எனப்படுகிறது. இந்த நாட்களில் கட்டடத்தை சுத்தம் செய்வது, திருவிழா நடத்துவது, பாட்டு, நடனம், உள்ளிட்ட கலைகளை கற்கலாம். *பத்ரை திதி* துவிதியை, சப்தமி, த