திருமணத்திற்கு பட்டு சேலைகள் அணிவது ஏன்..!!

பட்டு சேலை அணிவது எதுக்காக..



திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !!!

வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை
இந்த பதிவு எழுத தூண்டியது.
தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது.

இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.

திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர்.
அந்த காலத்தில் உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து வாழ்த்தும் முறை இருந்தது.
அதில் யார் எப்படி  நோய் உள்ளவர்கள் என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும்மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.

இதை சில நாடுகளும்தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது.

இதில்வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.

திருமண சடங்குகளில் மற்றும் கோவில்களில் ஒலிக்கப்படும் மந்திரங் கள் இந்த பட்டு நூல்களால் கிரகிக்க பட்டு அதன் மின் அதிர்வுகள் நம் உடலில் பரவும் போது நன்மை ஏற்படும்.

ஏழை எளியவர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்கள் கேட்கலாம்.. அவர்கள் வெள்ளை துணியை மஞ்சளில் தோய்த்து குடும்பத்தில் எல்லோரும் அணிவார்கள்.  பட்டு நூல் தரும் பயனை இந்த மஞ்சள் நூல் தந்து விடும்.

நம் முன்னோர்கள் கடை பிடித்த பழக்கங்கள் நமக்கு நன்மையே செய்யும் என்பதை நாம் உணர வேண்டும்.

சர்வம் கிருஷ்ணர்பணம்...

Comments

  1. சைவ சமயத்தில் பல உண்மை தத்துவங்கள் உண்டு இதை பலர் அறிந்திருக்க இல்லை .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை