கணேசா என்பதற்கு பொருள்

'கணேசர்'  என்பதற்கு பொருள்!!!!


பாஸ்கர ராயர் என்றொரு அம்பிகை பற்றாளர்.

பரம சாக்தர்.

சக்தி தத்துவத்தின் அடிக்கரும்பை ஆழச்சுவைத்திட்ட ஞானச் சுவையாளர்.

பரதேவதையின் பதமலர்களை நினைப்பது ஒன்றே நித்தியப் பணி!  என வாழ்ந்தவர்.

லலிதா சஹஸ்ரநாம விளக்கவுரை,  உள்ளிட்ட பலசக்திநெறி நூல்களை எழுதியவர்.

அவர் விநாயக சஹஸ்ரநாமத்திற்கு உரை எழுதியருளியுள்ளார்.

அவ்விளக்க உரைக்கு   "கத்யோதவ்யாக்யா" என்று  பெயர்.

அதில்  (பிள்ளையார் சகஸ்ரநாமத்தில்) முதல் திரு நாமமான கணேச: எனுஞ்சொல்லுக்கு இவ்வாறு  பொருளுரைக்கிறார்

மண் முதல் ஆகாயம் வரையுள்ள  ஐம்பூதமயமான இந்த ப்ரபஞ்சத்திற்கு  "கணம்" என்று பெயர்.

ஐம்பூத மய- இப்ரபஞ்சமாகிய  கனங்களுக்கு தலைவர்  ,  அது போலவே அவைகளுள் உறைபவர்  என்பதனால்
பிள்ளையாருக்கு "கணேசர்"  என்பது பெயராயிற்றாம்.!!

ப்ரபஞ்சம் என்பதற்கே ப்ர-சிறப்புற்ற , பஞ்சம்- ஐந்து ( ஐந்தின் கூட்டு)  என்பது அர்த்தம்.

அதாவது மண்,நீர், நெருப்பு, காற்று, வெளி ஆகிய இவ்வைந்தின் சிறப்புற்ற கலவைதான் இவ்வுலகம்.
அதை விவரிக்கும் சௌந்தர்யம் நிறை சொல்லே "ப்ரபஞ்சமாகும்".

ப்ரபஞ்சம் அழகுடையது என்பதை உணர்த்த எடுத்தாண்ட சொல்லே எத்தனை அழகுடையதாய் இருக்கிறது.

இந்த ரம்ய ப்ரபஞ்சத்தின் தோற்றுவாய் எது??
வேறெது !!சக்தி எனும் கந்தமூலமே இப்பரஞ்ச விருக்ஷமாய் துளிர்விட்டிருக்கிறது.

அபிராமிபட்டர் வர்ணிப்பதைபோல  அவள் "அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வள்ளி" யாயிற்றே!!

அந்த சௌந்தர்யவதி தானே ப்ரபஞ்சத் தாய்.  அவளின் மகவு தானே கணேசர்.!

எனவேதான் தாய்படைத்த உலகத்தை தான் காக்கும் தலைமகனாய் புழு முதற்பிரமன்வரை தன்னுதரத்தில் ஜனிக்கசெய்த உலகத்தாய்  அவளே என்பதை உணர்தவுமே பிள்ளையார்  இத்திருப் பெயர் ஏற்றார் போலும்?!

பாஸ்கர ராயரின்
பிள்ளையார் சகஸ்ரநாம கத்யோத விளக்கம் கீழ்வருமாறு :
கணேச:
வியதாதி ப்ரபஞ்சஸ்ய சமூஹோ கண உச்யதே!
ததாத்மகஸ்ததீசோ வா தேன தேவோ கணேஸ்வர:

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை