ஆன்மீக தகவல்கள்

 சில ஆன்மீக தகவல்கள்



    🕉🌺🕉🌺🕉🌺🕉

தவிர்க்க முடியாத பட்சத்தில் ராகுகால வேளையில் ஏதேனும் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் பரிகாரம் உண்டா?

 ஞாயிறு_ராகுகாலத்தை_தவிர, மற்ற நாட்களில் துர்க்கையை மனதார வழிபட்டு அந்தப் பணிகளைச் செய்யலாம்.

பலவிதமான ஜபமாலைகள் விற்கின்றன. துர்க்கை பக்தனான நான் எந்த ஜபமாலையைப் பயன்படுத்த வேண்டும்?

பொதுவாக ருத்ராட்ச மாலையை எந்த தெய்வ ஜபமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அதற்கு அடுத்த நிலையில், துளசி மணிமாலையைப் பயன்படுத்தலாம்.

கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து வருவது ஏன்?

பசுமாடு எல்லா தெய்வங்களின் வடிவாக உள்ளது. நாம் குடிபுகும் வீட்டிற்கு எல்லா தெய்வங்களின் திருவருளும் கிடைத்த பிறகு அதில் குடிபுகுந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.

உடல்நிலை காரணமாக விரதத்தை தவிர்த்து சத்துள்ள உணவை உண்ணும்படி வைத்தியர் எனக்கு ஆலோசனை கூறுகிறார். என்ன செய்வது?

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். உடம்பைக் கோயில் என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கடவுள் மீது பக்தி செலுத்த உடம்பு ஆதாரமாக இருக்கிறது. அதைப் போற்றிப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயலவேண்டும். அதனால், முடிந்தால் மட்டுமே விரதத்தை மேற்கொள்ளுங்கள்.

துளசி மாடத்தை வீட்டில் வைப்பதன் நோக்கம் என்ன?
எத்தனை முறை சுற்றி வந்து வழிபடவேண்டும்?
துளசி மகாவிஷ்ணுவின் வாசஸ்தலம். துளசி இதழ்கள் மகாலட்சுமி வடிவமானவை. லட்சுமி நாராயண ஸ்வரூபமானது துளசிச்செடி. இதை வீட்டில் வைப்பதால் வறுமை, நோய், கண்திருஷ்டி, தோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும். மூன்று முறை வலம் வர வேண்டும்.

மந்திரம் சொல்லும்போது முடிவில் ததாஸ்து' என்று சொல்கிறார்களே. இதன் பொருள் என்ன? ததா+ அஸ்து= ததாஸ்து. "ததா' என்றால் "அப்படியே' என்று பொருள். "அஸ்து' என்றால் "ஆகட்டும்' என்பது பொருள். ஆசிர்வாதம் எனப்படும் வாழ்த்து கூறும்போது,""எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் இறையருளால் கிடைக்கட்டும்'' என்பார்கள். மற்றவர்கள் அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்துவது தா

ஆடம்பரபக்தி, எளியபக்தி இதில் எதைக் கடவுள் விரும்புகிறார்?
விருப்பு வெறுப்பைக் கடந்தவர் கடவுள்.
வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடும் அவருக்கு கிடையாது. பக்தி என்பது மனதைப் பொறுத்த விஷயம். ஆடம்பரமாய்ச் செய்தால் பலன் அதிகம் என்றோ, எளிமையாகச் செய்தால் குறைவு என்றோ எண்ணத் தேவையில்லை. உள்ளத் தூய்மையே பக்திக்கு தேவை. மன்னர் கட்டிய கற்கோயிலை விட, பூசலார் நாயனார் கட்டிய மனக்கோயிலில் சிவன் விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பதை பெரியபுராணம் காட்டுகிறது. பொருளாதாரம் இடமளித்தால் ஆடம்பரமாக வழிபடுங்கள். இல்லாவிட்டால் எளிமையைப் பின்பற்றுங்கள். எதுவானாலும் உள்ளன்போடு செய்யுங்கள். <இறைவன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார்.

பிரதோஷ வேளையில் கோயிலுக்குச் சென்று வழிபடமுடியவில்லை.அப்போது வீட்டில் இருந்தே வழிபாடு செய்யலாமா?
கோயிலுக்குச் செல்வதே சிறந்தது. தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டிலிருந்து வழிபடுங்கள். பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்குரிய சிவாயநம, நமசிவாய ஐந்தெழுத்து மந்திரங்களை ஜெபிக்கலாம். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாராயணம் செய்யலாம்.

அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்கிறார்களே. உண்மையா?
சற்று கூட உண்மை இல்லை. அமாவாசையில் பிறந்தவர்களுக்கு திருட்டு குணம் உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படவில்லை. ஆனால், இந்த பொய் எப்படியோ மக்கள் மத்தியில் பரவி விட்டது.

சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்துவிட்டால் எடுத்துவிடலாமா அல்லது மறுமுறை பூ வைக்கும்போது தான் எடுக்க வேண்டுமா? 
சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் எடுத்துவிடலாம். தூய்மையும் வழிபாட்டில் ஒரு அங்கமே. நம் வசதிக்குத் தகுந்தாற்போல அடுத்தமுறை எப்போது வேண்டுமானாலும் பூ வைக்கலாம்.

கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?
பிரசாதமாக வாங்கிய விபூதி, குங்குமத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வது அவசியம். கோயில் சுவரில் விபூதி, குங்குமத்தை வைப்பதால் கீழே சிந்தி கால்மிதி படும்படி ஆகி விடுகிறது. கோயில் தூண்களும் பாழாகி பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறோம். கோயில்களில் போதுமான அளவு விபூதி கொடுத்தால் போதும். வாங்குவோரும் வீணாக்காமல் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?
ஒன்றும் தவறில்லை. அழகாகவும், மங்களகரமாகவும் இருக்கும். எனினும், வீட்டு வாசல், பூஜையறை, சமையற்கட்டு, கொல்லைப்புறம் முதலிய இடங்களில் அரிசிமாவில் கோலம் போட வேண்டும்.

சூரிய நமஸ்காரத்தைப் பெண்களும் செய்யலாமா?
சூரியனுக்கு யார்வேண்டுமானாலும் நமஸ்காரம் செய்யலாம். இதற்கு தடையேது! அதுசமயம் சொல்லவேண்டியஸ்லோகங்களை யாரிடமாவது தெரிந்து கொண்டு சொல்லலாம். கோளறு பதிகமும் சொல்லலாம்.

திருஷ்டி கழிக்க ஏற்ற நாள் செவ்வாயா, வெள்ளியா? ஏன்? 
நீங்கள் கேட்ட இரண்டு நாட்களுமே ஏற்புடையது தான். திருஷ்டியின் பாதிப்புகளைப் போக்கும் தெய்வங்களாக முருகனும் துர்க்கையும் உள்ளனர். முருகனுக்கு செவ்வாயும், துர்க்கைக்கு வெள்ளியும் ஏற்ற நாட்கள்.

விரதகாலத்தில் கறுப்புநிற உடை உடுத்துவது சரியா?
விரதமும் ஒரு சுபநிகழ்ச்சி தான். இதில் கறுப்பு நிற உடை உடுத்துவது கூடாது.

#சிவன்_வீற்றிருக்கும்_கயிலாயம் வடக்கில் இருக்கும்போது, தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறுவது ஏன்?
வடக்கில் இருப்பது பூலோக கயிலாயம். சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் என்பது எல்லா உலகங்களுக்கும் மேலான இடம். மோட்சம் எனப்படும் வீடுபேறு அங்கே தான் உள்ளது. வடக்கு, தெற்கு பிரச்னை வழிபாட்டில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் மாணிக்கவாசகர் "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று பாடினார்.

நான்காம்பிறையைப் பார்த்தால் நாய்படாதபாடு என்பது உண்மையா?
நாய் என்ன படாதபாடு படுவதைக் கண்டீர்கள்?
அவை சொகுசாக இருப்பதற்காகப் பலர் படாதபாடு படுவதைத் தான் இன்று கண்டு கொண்டிருக்கிறோம். மூன்றாம் பிறை பார்த்தால் நீண்டஆயுள் கிடைக்கும் என்றார்கள். அப்ப நான்காம் பிறை பார்த்தால் என்று ஒருவர் கேட்கிறார். "நாய்படாத பாடுதான்' என்று கூறிவிட்டார்கள். மூன்றாம் பிறை பார்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இப்படிச் சொல்லப்பட்டதே தவிர, நான்காம்பிறை பார்ப்பவர்களுக்கெல்லாம் நாய்பாடு ஏற்படும் என்பதல்ல. நான்காம்பிறையைப் பார்க்கக் கூடாது என்று கண்ணை மூடிக் கொண்டு நடந்து எங்காவது கீழே விழுந்து விடாமல் இருந்தால்  சரி தான்.

காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிடுவது ஏன்?
காசிக்குத் தினமும் லட்சக்கணக்கானவர்கள் செல்கிறார்கள். இவர்கள் எதையாவது விட்டு விட்டால் இந்தியாவின் பொருளாதாரம் சரியாகி விடுமா என்ன! இவ்வாறு விட்டு வருதல் என்பது கயா சென்று சிராத்தம்(திதி கொடுப்பது) செய்பவர்களுக்கு மட்டும் தான். கயாவில் செய்யும் பிதுர்காரியம் மிக உயர்ந்த புண்ணியத்தை தரும். இதைச் செய்துவிட்டு வந்த பிறகு, மனதில் எழும் அல்ப ஆசைகளை விடுத்து, தர்மநெறியில் வாழ்ந்தால் அந்த புண்ணியம் நம்மைக் காப்பாற்றும் என்பதால் அப்படிக் கூறுகிறார்கள். அதாவது நமக்குப் பிடித்தமான ஒன்றுக்காக சில சமயம் நெறி தவற நேரிடுகிறது. எனவே, தான் ஏதாவது ஒன்றை என்றில்லாமல், நமக்குப் பிடித்தமான ஒன்றை விட்டு விட வேண்டும்.

வழிபாட்டில் காற்றடித்து கற்பூரம், விளக்கு அணைந்துவிட்டால் மனம் வருந்துகிறது. பரிகாரம் கூறுங்கள்.  காற்றடிப்பதை நிறுத்த இயலாது. இது இயற்கையாக நிகழ்வது. இதுபோன்ற இடங்களில் நாம் தான் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். கனத்த திரியாகப் போட்டு விளக்கேற்றலாம். கற்பூரத்தை கட்டியாக வைக்காமல் நொறுக்கி தூளாக நிறைய வைத்து ஏற்றலாம். இவையும் மீறி காற்றில் அணைந்தாலும் வருத்தப்படத் தேவையில்லை. மீண்டும் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

மனத்தூய்மை பெற எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்?
ஐந்துமுக ருத்ராட்சம் மிக உயர்ந்தது. கண்,காது,மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்களே மனதில் எழும் எண்ணங்களுக்கு காரணமாகின்றன. ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து அதில் ஐம்புலன்களும் பொருந்திவிட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். புலன்கள் மனதைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்வது தடுக்கப்படும். தவறான எண்ணங்கள் ஏற்படாவிட்டால் மனம் தூய்மை பெற்றுவிடும்.

சுபம், அசுபம் இரண்டிலும் சங்கு ஊதுகிறார்களே ஏன்? சங்கு ஊதுவது எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்பதால் இப்படிச் செய்கிறார்கள். சுபநிகழ்ச்சியில் ஊதப்படுவதால் தேவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். அசுபத்தில் ஊதுவதால் பிதுர்கள் (நம் முன்னோர்) அவர்களது பிரிவால் சோகத்திலுள்ள நாம் மீண்டும் மகிழ்ச்சி பெற வாழ்த்துவார்கள்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

🙏
சுபம் !🌺

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை