ருத்ராட்சம் மகிமை
கலியுகத்தில் தியானம் செய்வதை விட நாம ஜெபம் செய்வதுதான் நல்லது எனறு சொல்கிறார்களே ...... அது உண்மையா ? நாம ஜபம் செய்யும் முறை பற்றி சற்று விளக்கவும்.
முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு விட்டு அது நல்லதா ? இது நல்லதா ? என்று குழம்பிக் கொண்டிருப்பது எப்பொழுதுமே நல்லதில்லை. ஆன்மீக வழியில் சென்ற நம் முன்னோர்கள் இத்தகைய நடைமுறைகளை எதற்காக வடிவமைத்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி தனக்குத் தானே சிந்தித்துப் பார்க்க முதலில் பழகிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நமது யூகம் தவறாகக் கூட போய் விடக் கூடும். பரவாயில்லை, வேறு யார் மூலமாவது சரியான விடை கிடைக்கும் பொழுது நம் கருத்தை நாம் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், யாரோ ஒருவர் சொல்கிறார் என்பதற்காக நம் நடைமுறைகளை, சாதனங்களை மாற்றிக் கொண்டேயிருக்கக் கூடாது. பிறகு நம்மால் எந்த வகையிலும் முன்னேற்றமடைய முடியாமல் போய் விடும்.
ஜபம் என்றால் என்ன ?
ஏதேனும் ஒரு மந்திரத்தையோ, நாமத்தையோ மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டேயிருப்பது ஜபம்.
மந்திரம் என்றால் என்ன ?
மனதை திடப்படுத்துவது மந்திரம். அதாவது சிதறி ஓடுகிற எண்ண அலைகளை தடுத்து, ஒரே நிலையில் நிறுத்துவதற்கு மந்திரங்கள் பயன்படுகின்றன.
அப்படியானால் தியானம் செய்கிறவர் எதற்காக ஜபம் செய்ய வேண்டும் ? தியானம் செய்கிறவர் மனம்தான் ஏற்கனவே ஒரு நிலைப்பட்டு விட்டதே ! ஆக தியானத்திற்கு முன் ஒருவர் பழக வேண்டியதுதான் ஜபம் என்பது தெளிவாகிறது அல்லவா ? ஜபத்தினால் கிட்டும் பலன்தான் தியானம்.
சைவ ஆகமங்கள் ஜபத்திற்கும், ஜப மாலைக்கும் நிறைய விதி முறைகளை வகுத்து வைத்திருக்கின்றன. நம்மைப் போன்ற சாமானய பக்தர்களுக்கு அதில் சொல்லப்பட்டுள்ள பல வகையான ஆகம விதிமுறைகளைக் கடைபிடிப்பது இயலாத காரியம். அதே சமயம் ஒரு குருவை நாடினால், அவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து, உபதேசித்து அருளுவார். அதாவது தீட்சை தரும் பொழுது அதற்கான எல்லா வழிமுறைகளும் கற்றுவித்தருளுவார்கள். அவ்வாறு இயலாத பட்சத்தில் இஷ்ட தெய்வத்தையோ, குல தெய்வத்தையோ, ரிஷகளையோ, சித்தர்களையோ, மகான்களையோ மனதில் குருவாக வரித்துக் கொண்டு ஜபத்தைச் செய்யலாம்.
உடல் சுத்தம், மனசுத்தம், ஸ்தான சுத்தம் அவசியம். ஜபமாலை 108 மணிகளுடையதாகவோ, 54 அல்லது 27 மணிகளை உடையதாகவோ இருக்கலாம். ஜபமாலை இல்லாதவர்கள் விரலகளால் எண்ணுவார்கள். அதை விட விரலிறைகளால் எண்ணிக் கொள்வது 8 மடங்கு பலன்களைத் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும்,
புத்திர தீபமணி மாலை 10 மடங்கு பலன் என்றும்,
சங்குமணி மாலை 100 மடங்கு பலன் என்றும்,
பவளமணி மாலை 1000 மடங்கு பலன் என்றும்,
ஸ்படிகமணி மாலை 10,000 மடங்கு பலன் என்றும்,
முத்துமணி மாலை 1,00,000 மடங்கு பலன் என்றும்,
தாமரைமணி மாலை 10,00,000 மடங்கு பலன் என்றும்,
பொன்மணி மாலை 10,000,000 மடங்கு பலன் என்றும், தருப்பைப் பவித்திர முடிச்சு மாலை 100,000,000 மடங்கு பலன் என்றும்,
#ருத்திரக்ஷமணி_மாலை_ இவையனைத்தையும் விட
#அநேக_மடங்கு_பலன்_என்றும்_ சொல்லப்பட்டுள்ளது.
ஜபத்தின் பொழுது ருத்திராக்ஷத்தை தரிசித்து விட்டு ஜபம் செய்தவர்களுக்கு இலட்சம் மடங்கு பலன் கிட்டும், ருத்திராக்ஷத்தை ஸ்பரிசித்து விட்டு ஜபித்தால் கோடி மடங்கு பலன் கிட்டும். சரீரத்தில் தரித்தவர்கட்கோ ஆயிரங் கோடி மடங்கு பலன் உறுதி. கையில் கொண்டு ஜபித்தவர்கட்கோ அநந்த கோடி பலன் குவியும். இந்த ருத்திராக்ஷ மணி மாலையை எப்படி கோர்க்க வேண்டும், எப்படி ஜபிக்க வேண்டும் என்பதெல்லாம், அது இனியும் நிறைய இருக்கிறது. எனவே ருத்திராக்ஷ மாலையை அணிந்து கொண்டு ஜபம் செய்வதே நமக்கு போதுமானது.
இப்படிப்பட்ட ஜபமானது மூன்று வகைப்படும். அவை உரை, மந்தம், மானதம் என்பனவாம். உரை என்பது அருகில் இருப்பவர்கள் காதுகளில் விழுகின்ற அளவுக்கு மெதுவாக ஜபிப்பதாகும். மந்தம் என்பது தன் காதுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் நாநுனி தீண்ட ஜபிப்பதாகும். மானதம் என்பது ஒருமை பொருந்திய மனதோடு மனதினால் ஜபிப்பதாகும். உரை என்கிற முறையில் ஜபிப்பவர்கள் ஆட்காட்டி விரலிலும், மந்தம் என்கிற முறையில் ஜபிப்பவர்கள் நடு விரலிலும், மானதம் என்கிற முறையில் ஜபிப்பவர்கள் மோதிர விரலிலும் மனிகளை வைத்து, பெருவிரலால் தள்ளி ஜபிப்பார்கள். உரை என்கிற வாசகத்திற்கு நூறு மடங்கு பலமும், மந்தம் பதினாயிரம் மடங்கு பலமும், மானதம் கோடி மடங்கு பலமும் தரும்.
காமிய ஜபமாயின் மணிகளைக் கீழ் நோக்கித் தள்ளி ஜபிப்பர். முக்தி வேண்டி ஜபிப்பவர்கள் மணிகளை மேல் நோக்கித் தள்ளி ஜபிப்பர். ஜபிக்கும் பொழுது இடகலை ஓடுமாயின் போகமுண்டாகும். பிங்கலை ஓடுமாயின் முக்தி உண்டாகும். சுழுமுனை ஓடின் புத்தி, முக்தி இரண்டும் உண்டாகும். வீட்டிலிருந்து ஜபித்தால் ஜபிக்கின்ற அளவே எண்ணிக்கை. திருநந்தவனத்திலிருந்து ஜபித்தால் ஒன்று ஆயிரமாகும். மலை மேல் அமர்ந்து ஜபித்தால் ஒன்று பதினாயிரமாகும். நதிக் கரையில் அமர்ந்து ஜபித்தால் ஒன்று இலட்சமாகும். சிவாலயத்தில் அமர்ந்து ஜபித்தால் ஒன்று கோடியாகும். சிவ சந்நிதியிலிருந்து ஜபித்தால் ஒன்று பலகோடியாகும் என்றறிக.
மரப்பலகை, வஸ்திரம், கம்பளம், மான்தோல், புலித்தோல், தருப்பை போன்றவைகளை ஆசனமாகக் கொள்ள வேண்டும். சட்டை அணிந்து கொண்டோ, சிரத்தில் துண்டோ, வேஷ்டியோ கட்டிக் கொண்டோ, போர்த்திக் கொண்டோ, தலை முடியை விரித்துக் கொண்டோ, கௌபீனம் தரியாமலோ, விரலிலே பவித்திரம் தரியாமலோ, பேசிக் கொண்டோ, இருளில் இருந்து கொண்டோ, நாய், பன்றி, கழுதை, புலையர் போன்றவர்களை அருகில் வைத்துக் கொண்டோ ஜபம் செய்யலாகாது.
ஜபம் செய்யும் பொழுது கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், வாதம் முதலியவை ஆகாது.
இன்னும் இன்னும் நிறைய இருக்கிறது. ஓரளவு முக்கியமானவற்றைத் தொகுத்து சொல்லியிருக்கிறேன். குருமுகமாக ஜபிக்க ஆரம்பிப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் இதைப் படித்து உடல் சுத்தம், மன சுத்தம், இருப்பிட சுத்தம் கொண்டு ஜபித்து பயனடையுங்கள். திருச்செந்தூர் சென்று மூலவருக்கு எதிரே உள்ள சுவரில் ஒரு துவாரம் இருக்கும், அதில் முருகப்பெருமானை குருவாக வரித்துக் கொண்டு, காதைக் கொடுத்து, அலைகடலின் ஓங்கார நாதத்தை மந்திர தீட்சையாகப் பெற்றுக் கொண்டும் ஜபிக்க ஆரம்பிக்கலாம். திருச்சிற்றம்பலம்.

Comments
Post a Comment