சூரசம்ஹாரத் திருவிழா

#திருச்செந்தூர்_சூரசம்ஹார_விழா__
:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற உள்ளது

அல‌ங்காரமாக வ‌ந்த முருக‌ன், சூரனை ச‌ம்ஹார‌ம் செ‌ய்த கா‌ட்‌சியை ‌திரு‌ச்செ‌‌ந்தூ‌ரி‌ல் கூடி‌யிரு‌ந்த ஆ‌யிர‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் இன்று காண்பார்கள்

பலரு‌ம் ‌திரு‌ச்செ‌ந்தூ‌‌ர் கட‌ற்கரை‌யி‌ல் ‌நீராடி த‌ங்களது க‌ந்த ச‌‌ஷ‌்டி ‌விரத‌த்தை முடிக்க பெறுவார்கள் .

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 29ஆம் தேதி துவங்கிய கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது.

பக்தரகள் விரதமிருந்து இறைவனை தரிசனம் செய்கின்றனர். கோயிலிலும் சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடந்த வண்ணம் உள்ளன.

இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகளும் நடக்கின்றன.

இன்று மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹார விழா நடக்க உள்ளது

முதலில் கஜமுக சூரனையும், பின்பு சிங்கமுக சூரனையும், 3வதாக சூரபத்மனையும் முருகப் பெருமான் வதம் செய்வார்.


You can join to my public group to learn more about spiritual information : -

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை