துளசி செடி

துளசியின் மகிமை...
------------------


துளசி என்பது தெய்வீகத்தன்மை வாய்ந்த ஒரு மூலிகைச் செடியாகும். இதனை மகாலட்சுமியாக நினைந்து வழிபடுவது நமது மரபாகும். வஜன் – மாதவி தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்து துளசிச் செடியாக மாறி பகவான் விஷ்ணுவிற்கு பிடித்தமானவள் ஆனாள். எனவே நாராயணனின் பூஜையில் துளசி இல்லையேல் அந்தப் பூஜை சிறப்படையாது என்று கூறலாம்.
துளசியில் நல்ல துளசி, கருந்துளசி, செந்துளசி, கர்ப்பூரத்துளசி, சிறு துளசி, பெருந்துளசி, நாய்த்துளசி, சிவத்துளசி, இராமர் துளசி, கிருஷ்ண துளசி எனப் பல வகைகள் உள்ளன. துளசி கார்ப்புத் தன்மை கொண்ட மணம் உள்ள மூலிகை ஆகும்.
இதில் இராமர் துளசி பச்சை நிறமாக இருக்கும். கிருஷ்ண துளசி மிகக் கரும் பச்சை நிறம் கொண்டதாக இருக்கும். இராமர் துளசியே வீடுகளில் வைத்து வழிபடப்படுகிறது. வீட்டின் பின்புறத்தில் கிணற்றருகே சிறிய மாடம் கட்டி துளசிச் செடியை வைத்து வழிபடும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
துளசிக்கு நீர் ஊற்றி விளக்கு வைத்து மிகத் தூய்மையோடு 16 முறை வலம் வந்து வணங்க சகல செல்வங்களும் எளிதில் கிடைக்கும். துளசிக்கு நீர் வார்ப்பவர்களின் தூய்மை சிறிது குறைந்தாலும் துளசி கருகத் தொடங்கிவிடும். அது வீட்டுக்கு கேடு விளைவிக்கும் என்று மக்கள் நம்புவதால் துளசியை வைத்து வழிபடுவோர் அக, புறத் தூய்மையோடு துளசி வழிபாட்டை நடத்துகின்றனர்.

You can join to my public group to learn more about spiritual information : -


Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை