Posts

கண் திருஷ்டி நீங்க

Image
 கண் திருஷ்டி, கெட்ட சக்தியை மூன்றே நாட்களில் விரட்டும் பரிகாரம் இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். கண் திருஷ்டியின் மூலமாகவோ, கெட்ட சக்தியின் மூலமாகவோ பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும். நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர, ஏதாவது ஒரு தீர்வு கிடைத்து விடாதா என்ற தேடல் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. வீட்டிலாக இருந்தாலும் சரி, தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு நல்லது நடந்து விட்டால் போதும். அதன் பின்பு, எப்படி தான் கஷ்டங்கள் வருமோ என்று தெரியாது. நடந்த ஒரு நல்லதுக்கு, பத்து கஷ்டங்கள் நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ‘ஏண்டா இந்த நல்லது நடந்தசுன்னு, யோசிக்கிற அளவுக்கு சில பேருக்கு எல்லாம் கஷ்டம் வரும்’. sad நம்மில் பலபேர் இதை அனுபவ ரீதியாக உணர்ந்து இருப்போம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தால், கண்திருஷ்டி பட்டு உடனடியாக அடுத்து ஏதாவது ஒரு பெரிய சண்டை வந்துவிடும். தொழிலில் லாபம் கிடைத்தால், கண் திருஷ்டி பட்டு எதிர்மறை ஆற்றலால் ஏதாவது ஒரு விபரீதம் ஏற்பட்டு விடும் அல்லவா? இப்படிப்பட்ட பிரச்சனை

வாராஹி அம்மன் ஸ்தோத்திரம்

Image
 வாராஹி அம்பிகே ஸ்தோத்திரம்     1,உக்ர ரூபிணி உமையவள் தேவி பரதேவி  உன் மத்த பைரவி உமா சங்கரி உமாதேவி  ஜெய ஜெய மங்கள காளி பைரவி  ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி 2,தர்மத்தை காத்த நாயகி நான்மறை தேவி  விசுக்கரன் என்னும் அரக்கனை அழித்தவளே  ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி  ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி 3, தர்ணத்தில் வருபவள் குணமிகு தாயவள்  தண்டத்தை எடுத்தவள் தண்டினி ஆனாவளே  ஜெய ஜெய மங்கள காளி பைரவி  ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி 4,மாபெரும் சக்தி மஹா வாராஹி மங்களா செல்வி  சியமாளா ரூபணி சிங்கார ரூபிணி வாராஹா ரூபிணி  ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி  ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி 5, எண்ணிய பேரை காப்பவளே கற்பகமே  வாட்டம் போக்கும் நாயகி வாராஹி தேவி வார்த்தாளி  ஜெய ஜெய் மங்கள காளி பயங்கரி  ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி     6,ஆண்டவளே எம்மை ஆள்பவளே அகிலாண்ட நாயகியே  கண்டத்தில் நின்று கருனையும் கொண்டு காப்பவளே  ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி  ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி  7,அனுதினம் உன்னை அண்டியே வந்தோம்  அணுவுக்குள் அணுவாக திகழ்பவள் வார்த்தாளி  ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி  ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி  8, தேடி வந்தால் ஓடி வருபவள

மோட்ச தீபம்

Image
 இறந்தவர்களுக்காக ஆலயங்களில் மோட்சதீபம் ஏற்றப்படுவது ஏன் மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை மர்மமாக இருப்பதுதான் பல ஆன்மிக நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. பித்ருக்கள் வழிபாடு, அவர்களுக்கான சடங்குகள் எல்லாமே பெரியோர்களால் வகுக்கப்பட்டு காலம்காலமாக நடைபெற்று வருகிறது. இறந்துபோனவர்களுக்கான ஈமச் சடங்குகள் ஒவ்வொன்றும் அவசியமானவை என்று நினைத்து சிரத்தையுடன் செய்து வருவது மரபு. இந்தச் சடங்குகளைப் பற்றி பல ஆன்மிக நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறிப்பாகக் கருடபுராணத்தில் மிக விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி 'உடலிலிருந்து பிரிந்த ஆன்மா முதல் மூன்று நாள்கள் நீரிலும், அடுத்த மூன்று நாள்கள் அக்னியிலும், அடுத்த மூன்று நாள்கள் ஆகாயத்திலும், இறுதியில் ஒரு நாள் தனது வீட்டிலும் ஆவியுருவில் வசிக்கும்' என்று கருட புராணம் கூறுகிறது. இந்தப் பத்து நாள்களிலும் ஆன்மாவின் கண்கள் மயங்கிய நிலையில் இருக்கும் என்றும், அதன் காரணமாக வெளிச்சம் தடைபடும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இறந்தவர் வீட்டில் 10 நாள்களும் விளக்கேற்றி வைக்கப்படுவது வழக்கம். விளக்கின் வெளிச்சத்தில், இறந்த ஆன்மா தான் உ

ஆர்த்தி எடுப்பது ஏன்?

Image
 ஆரத்தி எடுப்பது ஏன்?!  அறிவியல் பூர்வமான காரணங்கள்!!!  காலம், காலமாக நமது பழக்கவழக்கங்களில் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று ஆரத்தி எடுப்பது. தற்போது நாம் இதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம்.  ஆனால், இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறையல்ல. கடவுளை வழிப்படும் போது எதற்கு ஆரத்தி காண்பிக்கிறோம் என்று தெரியுமா?  இதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக்கிறது. நாம் தினந்தோறும் ஆரத்தி எடுப்பது கிடையாது. முக்கிய நாட்களில் மட்டுமே எடுப்போம்.  திருமணம் முடிந்த தம்பதியர், பிரசவம் முடிந்த பெண், வெளியூர் பிராயணம் முடித்து வரும் நபர்கள் என இவர்களுக்கு தான் நாம் பொதுவாக ஆரத்தி எடுப்போம்....  இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்!  நம் முன்னோர்கள் ஏன் இந்த மாதிரயான சூழலில் மட்டும் ஆரத்தி எடுத்தார்கள், இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணிகள் என்னென்ன என்று காணலாம்.....   மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீர் நிரப்பி, மஞ்சள் அரைத்து சேர்த்து அதில

விநாயகர் காரிய சித்தி மாலை

Image
 விநாயகர் காரிய சித்தி மாலை:--- பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவண்பால் உதிக்குமோ எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம். உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ் உலகிற்பிறங்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்? உலகம்புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும் தொடரும் உயிர்கள் எவனருளால் கரர்வழ் பதியும் உறச்செய்யும் கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத் தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம். மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம் ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன் ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன் உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் பொய

வரலக்ஷ்மி விரதம்

Image
வரலஷ்மி விரதம்! ஸ்ரீவரலஷ்மி பூஜையை செய்தாள் சியாமபாலா. இந்த பூஜை செய்த பிறகு சில நாட்களிலேயே தங்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றி அரசராக சிம்மாசனத்தில் அமர்ந்தார் அரசர் பத்ரச்ரவஸ்.  அத்தனை மகத்துவமானது வரலஷ்மி விரதம் பூஜை முறை   காலையில் எழுந்து வாசலை பெருக்கி கோலம் போட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி முதலில் விநாயகர் பூஜையை செய்ய வேண்டும்.  ஈசானிய மூலையில் ஒரு மண்டபம் அமைத்து ஒரு படி நெல்லை சதுரமாகப் பரப்பி அதன் மீது ஒரு தாம்பூலம் வைத்து அதன் மீது அரிசியைப் பரப்பி அரிசியின் மேல் ஒரு குடம் வைத்து அந்த குடத்திற்குள் தண்ணீர் ஊற்றி, அந்த குடத்தின் சுற்றி சந்தனம் குங்குமம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து அந்த குடத்தின் மேல் மாவிலை சொருகி அதன் மேல் தேங்காயை வைத்து கலசத்தின் மேல் ஸ்ரீமகாலஷ்மி உருவத்தை அமைத்து நகைகளாலும் நறுமண மலர்களாலும் அலங்கரித்த பிறகு லஷ்மி மந்திரங்கள் உச்சரித்து பூஜிக்க வேண்டும்.  ஒன்பது முடிச்சு உள்ள சரடை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜைக்கு வந்த பெண்களுக்கு சரடுகட்டி வெற்றிலை-பாக்கு பூ தந்து அத்துடன் கொழுக்கட்டையும் வழங்க வேண்டும். ஸ்ரீ வரலஷ்மி பூஜை எண்ணற்ற வரங்க

உலகம், உயிர், மனிதன்

Image
உலகம் தோன்றியது எவ்வாறு?  மனிதன் தோன்றியது எவ்வாறு?  உயிர் என்றால் என்ன?  இக்கேள்விகளை ஒரு மனிதர் கேட்பாராயினில் அவருக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அறிவியல் பேசுவோருக்கும் இருக்கின்றது… ஆன்மிகம் பேசுவோருக்கும் இருக்கின்றது. அக்கடமையை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது. நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும். இந்நிலையில் அவர்கள் கூறும் விடையினைக் கண்டோம் என்றால்  ஆன்மிகம் பேசுவோர்  #இறைவன்தான்_உலகைப்_படைத்தான்  என்றும் அறிவியல் பேசுவோர் இறைவன் படைக்கவில்லை மாறாக உலகம் ‘பெரு வெடிப்பு’ முதலிய சில காரணியால் இயல்பாகவே உருவாயிற்று என்றும் கருதுவது புலனாகின்றது. இக்கருத்துக்களி டையே மாபெரும் சண்டைகளும் நீண்டக் காலமாக முடியாது ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் கடவுள் இருக்கின்றார்… உலகையும் மனிதனையும் படைத்தது அவர் தான் என்றுக் கூறும் நம் மீதும் அக்கேள்விக்கான விடையினைக் கூறும் கடமை விழத்தான் செய்கின்றது. அதன் விளைவாக அக்கேள்விகளுக்கான விடைகளையும் நாம் காணத்தான் வேண்டி இருக்கின்றது.  அதற்கு நாம் அறிவியலையும் காண வேண்டி இருக்கின்றது .. ஆன்மீகத்தையும் காண வேண்டி இருக்கின்றது…காண்போம். ..!!! “அறி

தர்ப்பைப் புல்

Image
“தர்பையின் மகிமை”   க்ருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகள் (வேதபாஷ்ய ரத்னம்,வேதாந்த மீமாம்ஸா சிரோமணி) நமது வாழ்க்கைக்கு உணவு, ஜலம், காற்று எல்லாம் தேவை. உணவு என்பது தான்யங்களின் மூலம் கிடைக்கிறது. பசி என்ற நோயை குணப்படுத்துவதால் தான்யங்களுக்கு ஓஷதிகள் என்று வைத்து தைத்திரீய உபநிஷத்தில் “ஓஷதீப்யோ அன்னம்” எனப்படுகிறது. உணவினால் உயிருக்கு பலம் ஏற்படுதல் மட்டும் போதாது. பல நோய் எதிர்ப்பு சக்தியையும் நாம் பெற வேண்டும். அதற்காக விசேஷமாக ரத்த ஸுத்திக்காக அருகம்புல் மிகவும் பயன் படுவது போல தர்பை எனப்படும் புல்வகையானது சில சூழ்நிலைகளில் உள்ள கெடுதல்களை போக்கடிக்கும் தன்மை பெற்றது என்று வேதத்திலேயே கூறப்படுகிறது. 1.பவித்ரம் வை தர்பா : தர்பையானது புனித தன்மையைத்தருகின்றன. நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது. எனவே தான் நாம் எந்த ஒரு செயல் (வைதீககார்யங்கள்) செய்ய ஆரம்பிக்கும் போதும் தர்பத்தில் உட்கார்ந்து கையிலும் தர்ப்ப பவித்ரத்தை அணிகிறோம். 2.“தர்பையின் உத்பத்தி”: வேதத்தில் பல முறை இந்த கதை வருகிறது. இந்திரன் வ்ருத்ராஸுரனை கொன்ற பொழுது வ்ருத்ராஸுரனின் தலை நதியில் விழுந்தது. அப்போது ஜ

27 நட்சத்திரங்கள்

Image
27 நட்சத்திரங்களின் தன்மைகளும் பயன்களும் ****************** ஒவ்வொரு  நட்சத்திரங்களும் ஒவ்வொரு தன்மை உடையது.  இருபத்தி ஏழு நட்சத்திரங்களையும் மும்மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். மேல் நோக்கு நாள்  ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாட்களை மேல்நோக்கு நாள் என்பார்கள்.  இந்நட்சத்திரங்களை ஊர்த்துவமுத நட்சத்திரம் என்பர்.  இந்த மேல்நோக்கு நாளில் மேலே எழும்பக்கூடிய நாளில்  வீடு கட்டுதல், செடி, கொடி, மரம், பயிர்கள், விருட்சங்கள் பயிரிடுதல், பந்தல், மதில் எழுப்புதல் போன்ற காரியங்களைச் செய்வார்கள்.  பட்டாபிஷேகம், உத்தியோகம், ராஜதரிசனம், வியாபாரம், கிரயம், விக்கிரயம், ஆபரணம், மெத்தை போன்றவற்றுக்கும் மேல்நோக்கு நாள் உகந்ததாகக் கருதப்படுகிறது.  கீழ்நோக்குநாள் பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் வரும் நாட்களை கீழ்நோக்கு நாள் என்பார்கள்.  இந்நாளில் கீழ்நோக்கி செல்லக்கூடிய குளம், கிணறு ஆகியவை உண்டாக்கலாம்;  புதையல், களஞ்சியம் ஆகிய விஷயங்களில் இ

துவாதச நாமங்கள்

Image
துன்பம் தீர்க்கும் துவாதச நாமங்கள் ! பிரமாண்ட புராணம் வாராஹி தேவியின் மகிமைகளை விளக்குகிறது. பண்டாசுர வதத்துக்கு லலிதாம்பிகை புறப்படும் போது தேவி வாராஹியும் தன் கிரி சக்கரத்தில் எழுந்தருளினாள். அப்போது சுற்றியிருந்த தேவதைகள் வாராஹியை துவாதச நாமங்கள் சொல்லித் துதித்தனர். துவாதசம் என்றால் பன்னிரண்டு. இந்தப் பன்னிரண்டு நாமங்களைச் சொல்லித் துதித்து அன்னையை வழிபட்டால் சகல காரியங்களும் ஸித்தியடையும் என்கிறது பிரமாண்ட புராணம்.  1. பஞ்சமி, 2. தண்டநாதா, 3. சங்கேதா, 4. சமயேஸ்வரி, 5 சமய சங்கேதா, 6. வாராஹி, 7. போத்ரினி, 8. சிவா, 9. வார்த்தாளி, 10. மகா சேனா, 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி, 12. அரிக்கினி   என்பன அந்த நாமங்கள். இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி அன்றும் அன்னையின் சந்நிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க, தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால் கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வாராஹி. அன்னையை பஞ்சமி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது நம்பி