Posts

காயத்ரி மஹாத்மியம்

Image
#காயத்ரி_மஹாத்மியம்_ தேவி பாகவதத்தில் 12-ஆவது ஸ்காந்தத்தில் 51 மற்றும் 52 வது அத்தியாயங்களாக அமைந்திருப்பவைதான் காயத்ரி மஹாத்மியமும், காயத்ரி ஸஹஸ்ரநாமமும், நாரத முனிவருக்கு நாராயண ரிஷியால் இவை உபதேசிக்கப்பட்டன. காயத்ரி மஹாத்மியத்தில் 24 ஸ்லோகங்களைக் கொண்ட காயத்ரி ஸ்தோத்திரம் அடங்கியுள்ளது. காயத்ரி என்கிற பதம் காய்+த்ரீ எனப் பிரிந்து பொருள் தரும். அதாவது காய் என்றால் கானத்திற்கு உரியது. பாடப்பெறுவது எனப் பொருள் கொள்ளாமல் காயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி தியானித்தால் பெரும் பலன் உண்டு. த்ரீ என்பது த்ராயதே என்று விரிந்து காப்பாற்று எனப் பொருள்படும். அன்னை காயத்ரி தனது அபய கரங்களால் நமது பயத்தைப் போக்கியருள்வாள். கா+ய+ஆ+த்ரீ எனும் நான்கு எழுத்துக்களின் சேர்க்கைதான் காயத்ரி. இதில் கா-என்பது நீர் தத்துவமாகிய கண்களுக்குப் புலப்படும் ஸ்தூலத்தைக் குறிப்பது. இதற்கு அதிபதி பிரம்மன். ய-என்பது வாயு தத்தவமாகிய சூட்சுமத்தைக் குறிப்பது. இதற்கு அதிதேவதை விஷ்ணு. ஆ-என்பது காரணதேகம். இதன் அதிபதி ருத்ரர். த்ரீ-எனும் பதம் இம்மூவரும் சேர்ந்து நம்மைக் காப்பாற்றியருள்வர் என்பதைக் குறிக

திருமகளும் தாமரையும்

Image
திருமகளும், தாமரையும்.., பகவான் விஷ்ணுவின் பாதங்களைத் தாமரைப் பூவுக்கு ஒப்பிடுகிறார் நம் பகவத்பாதர்கள். ஸ்ரீபதி பதாரவிந்தே ‘பத அரவிந்தம்’ என்றால் திருவடித் தாமரை. ஸ்ரீ என்றால் மஹாலக்ஷ்மி. ஸ்ரீபதி – லக்ஷ்மி நாராயணன். ஸ்ரீபதிக்குத் தாமரைப் பாதமிருப்பது மிகவும் பொருத்தம். ஏனென்றால் லக்ஷ்மிக்கு தாமரைப்பூ ஸம்பந்தம் ரொம்பவும் ஜாஸ்தி. பத்மப்ரியே பத்மினி பத்ம ஹஸ்தே பத்மாலயே பத்ம தளாயதாக்ஷி என்று அவளை ஸ்தோத்ரம் செய்வார்கள். அவளுக்கு தாமரைப் பூவிடம் ப்ரியம் அதிகம். ஆகையால் “பத்மப்ரியே!” பத்மினி என்றால் தாமரைக்கொடி. மஹாலக்ஷ்மி இப்படித்தான் ஸெளகுமார்யத்தால் துவண்ட கொடியாக இருக்கிறாள். பெண்களில் உத்தமமான லக்ஷணம் உடையவர்களை ‘பத்மினி ஜாதி’ என்பதே வழக்கம். ‘பத்மினி’ என்றால் பத்மங்களை உடையவள் என்றும் அர்த்தம் செய்துகொள்ளலாம். லக்ஷ்மி நித்யவாஸம் செய்வதாக ஐந்து இடங்கள் உள்ளன. தாமரைப் பூவின் மத்தி, யானையின் மஸ்தகம் (தலை) , பசுவின் பின்புறம், வில்வ இலையின் பின்பக்கம், ஸுமங்கலிகளின் ஸீமந்தம் (வகிடு) என்பவை இந்த ஐந்து. இப்படி ஐந்து இருந்தாலும் எல்லாருக்கும் தெரிந்தது அவள் தாமரைப்பூவில் உட

ஆதித்ய ஹ்ருதயம்

Image
ஞாயிறுகளில் சூர்ய வழிபாடு செய்ய வேண்டும். எதிரியை அழிக்க வகுத்தது ஆதித்ய ஹ்ருதயம். எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம். ஸ்ரீராமர் ராவணனை எதிர்த்து போர் புரிந்த பொழுது, அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றி ஆதித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார் ஸ்ரீ சிவசூர்யநாராயணஸ்வாமியே துணை சூரியன் பல வேறு  பெயர்கள் : பரிதி பாற்கரன் ஆதித்தன் பனிப்பகை சுடர் பதங்கன் இருள்வலி சவிதா சூரன் எல் மார்த்தாண்டன் என்றூழ் அருணன் ஆதவன் மித்திரன் ஆயிரஞ்சோதியுள்ளோன் தரணி செங்கதிரோன் சண்டன் தபனன் ஒளி சான்றோன் அனலி அரி பானு அலரி அண்டயோனி கனலி விகர்த்தனன் கதிரவன் பகலோன் வெய்யோன் தினகரன் பகல் சோதி திவாகரன் அரியமா இனன் உதயன் ஞாயிறு எல்லை கிரணமாலி ஏழ்பரியோன் வேந்தன் விரிச்சிகன் விரோசனன் இரவி விண்மணி அருக்கன் சூரிய வட்டம் = விசயம் சூரிய கிரகணம் = கரம், தீவிரம். எதிரிகளை அழிக்கும் ஆதித்ய ஹிருதயம் ஸ்ரீராமர் ராவணனை எதிர்த்து போர் புரிந்த பொழுது, அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோ

தன்வந்திரி பகவான் ஸ்லோகம்

Image
ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஸ்லோகம் சதுர்புஜம் பீத வஸ்திரம் ஸர்வாலங்கார சோபிதம் த்யோயேத் தன்வந்த்ரிம் தேவம் ஸூராஸூர நமஸ்க்ருதம். நோய்கள் விலக, நோயற்ற வாழ்வு கிடைக்க மேலே உள்ள மந்திரத்தை முழுமனதுடன் கூறி வழிபட்டு தன்வந்திரியை சரண் அடையவும்.

குழந்தை பேறு தரும் மந்திரம்

Image
குழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம்!   தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத: தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்

தேவாரப் பாடல்கள்

Image
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள் """""""""""""""""""""""""" நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி, சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம். அசுவினி: தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன் எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதே மிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும் திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே பரணி: கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானை இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப் பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும் அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே. கார்த்திகை/கிருத்திகை: செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளார் எல்லிய விளங்க நின்ற

கல்யாண ஆஞ்சநேயர்

Image
 கல்யாண ஆஞ்சநேயர் கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர்தான் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால், ஆஞ்சநேயருக்கு ஒரு மனைவியும் மகரத்வஜன் என்ற ஒரு மகனும் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தில் வரும் மயில்ராவணன் கதை, கம்போடியா மற்றும் தாய்லாந்து நாட்டு ராமாயணங்கள் கூறுகின்றன. அனுமாரைப் போன்றே அவரது மகனும் பராக்கிரமசாலியாக இருந்தார் என்பதும், அந்த மகன் `மச்சவல்லபன்’, `சுறவக்கொடியோன்’ என்று தமிழிலும், `மகரத்வஜன்’ என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகிறார். மகரத்வஜன், ஆஞ்சநேயருக்கு மகனாகத் தோன்றியது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். ராம லக்ஷ்மணர்களைக் காப்பதற்காக அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்தபோது, அவரது உடலில் பெருக்கெடுத்த   வியர்வை கடலில் விழுந்தது. அப்போது மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவகன்னி ஒருத்தி, அந்த வியர்வையை விழுங்கினாள் என்றும், இலங்கையைத் தீக்கிரையாக்கிவிட்டு, பற்றியெரிந்த வாலை அணைப்பதற்காக அனுமார் கடலில் இறங்கியபோது அவரில் இருந்து வழிந்த

அமாவாசை வழிபாடு

Image
*அமாவாசையில் வழிபடுவது எப்படி?* ***************************************************** அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யல

துளசி

Image
"து  ள  சி" எ ந்த வீட்டில் காலையிலும் - மாலையிலும், "துளசிதேவியை" வணங்கி வருகிறார்களோ, அங்கு, "யமதேவன்" நுழைய முடியாது. கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை. நாள்தோறும், "தீபமேற்றி" பூஜிப்பவர்களுக்கு 100 க்கணக்கான யாகம் செய்ததன் பலனை அடைவர். து ளசியின் காற்று பட்டாலும், துளசியை வலம் வந்து வணங்கினாலும் எல்லா பாவங்களும் நீங்கும். தொ டுபவர்கள் புனிதம் அடைகிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம் உள்ள தூசியை நெற்றியிலிடுவது மாபெரும் கவசமாகும். ப கவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப் பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய பலனை அடைவர். ப கவானது தாமரைப் பாதங்களில் சந்தனம் கலந்து துளசி இலை யை ஒட்டுபவர், ஒரு லட்சம் அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனை பெறுவர். "துவாதசி" தினத்தில் பகவான் துளசியுடன் வசிக்கிறார். து ளசி இலைகளை, பெள ர்ணமி, அ மாவாசை , து வாதசி, சூ ர்ய சங்கராந்தி, உ ச்சி மதியம், இ ரவு சந்தியா... ஆகிய வேளைகளில் பறிக்கக் கூடாது. பி ரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹங்கள் மதிக்கப்ப

சனிக்கிழமையும் பெருமாளும்

Image
சனிக்கிழமை பெருமாள் --------------------------------------------- ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது. சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!”