Posts

Showing posts from May, 2021

அரைஞாண் கயிறு (அரணாக்கொடி)

Image
 *வெள்ளி அரணாக்கொடி* இதை பழைய காலத்தில் குடியானவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிவர்.. குடியானவர் குடும்பம் மட்டுமே இல்லை கொஞ்சம் வசதி படைத்த நம் தாத்தா வயதில் தந்தை வயதில் இருந்த அனைவரும் அதை அணிந்து கொண்டு இருப்பதை பார்த்தும் இருப்பீர்கள்.... என்ன அவர்கள் அனைவரும் அதை அணிந்து கொண்டு இருந்த போது அவர்கள் அனைவரும் கோமணம் (விவசாய காட்டில் வெள்ளையும் சொள்ளையுமா சுத்த முடியாதே???) அணிந்து மட்டுமே இருப்பார்கள்.. இதை பார்த்து பார்த்து பழகி இன்றைய பேரன்மார்கள்  இப்பொழுது வெள்ளி அரணாக்கொடி என்பது ஏதோ தீண்ட தகாத பொருள் போல இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.. அரணாக்கொடி எதற்காக என்று இன்னும் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் விதமாக இப்பதிவு.. ஆண்களின் இடுப்பில்  உரசி கொண்டே இருக்கும்  அரணா என்பது  ஆண்களின்  விந்தணு பையில் வைத்து இருக்கும் விந்தணுக்கள் எதை அழிவில்லாது காப்பாற்றி கொடுத்து அவர்களுடைய வம்ச விருத்தி செய்ய உதவுகிறது.. ஜோதிட ரீதியான அடிப்படையில் சனி பகவான் சுக்கிரன் வீடான துலா ராசியில் செல்லும்போது உச்சம் அடைகிறார்.. இந்த சனி பகவான் நம் உடலில்  ஆங்கிலத்தில் ஸ்பைனல் கார்ட் என

துளசி மாடம்

Image
வீட்டில் துளசி இருந்தால் மகாலட்சுமி கூடவே இருப்பார்”… வீட்டுக்கு முன்னாடி கட்டாயம் வைங்க..!! ஒவ்வொரு வீட்டின் முன்பாக ஒரு துளசி செடியை வளர்த்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவருடைய வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்க வேண்டும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும். வீட்டின் முன்னே அல்லது முற்றத்திலோ வளர்க்கவும். நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்தச் சகுன பாதிப்பும் இல்லை. வீடுகளில் துளசிமாடம் அமைப்பதன் மூலம் பூச்சிகள் நுழையாமல் தடுக்கலாம். வீட்டில் துளசிமாடம் வைத்து வழிபடுவதன் மூலம் அன்னை மகாலட்சுமியின் அருளை மட்டுமல்ல பகவான் கிருஷ்ணரின் அருளையும் பெறலாம். பகவான் கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் கசப்பான விஷயம் அனைத்தும் முறிந்து இனிப்பான வாழ்க்கை அமையும். பெண்கள் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது துளசியிடம் விடை பெற வேண்டும். பிறந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் நீருற

குழந்தை பாக்கியம்

Image
 'தப்பாமல் குழந்தைபாக்கியம் தரும் சீராளம் பொம்மை'..."  "திருச்செங்காட்டங்குடி சூளிகாம்பாள் உடனுறை உத்தராபதீசுவரர் திருக்கோயில்"..உத்ராபதியாகிய பைரவத்தொண்டருக்கு சாப்பிட சிறுத்தொண்ட நாயனார் தன் மகன் சீராளனை பலியிட்டு கறி சமைத்து கொடுத்த நிகழ்வு ஆண்டுதோறும் சித்திரை பரணி நட்சத்திர நாளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.பிள்ளைக்கறி அமுது படையல் குங்குமப்பூ, பச்சை கற்பூரம், அரிசி மாவு கொண்டு செய்யப்படும். அதற்கு சீராளம் என்று பெயர்.மாவில் செய்த ‘சீராளம் பொம்மை’. புத்திர பாக்யத்திற்கு சீராளம் என்பார்கள். இந்த சீராளம் பற்றி ஒரு ஐதீகம்.  குழந்தை இல்லாதவர்கள் இந்த சீராளம் சாப்பிட்டால் மறுவருடத்திற்குள் குழந்தை பிறக்கும் என்கிறார்கள்.  மயிலாடுதுறையில் இருந்து 42 கி.மீ..நன்னிலத்துக்கு தென்கிழக்கே 9 கி.மீ.....திருவாரூரில் இருந்து 15 கி.மீ.

வருத்தினி ஏகாதசி விரதம்

Image
 வருத்தினி ஏகாதசி -  யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார் மற்றும் தன் எல்லா பாவ விளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார். ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலின் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கூறினார். ஓ! வாசுதேவா, எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து (ஏப்ரல்/மே) மாதங்களின் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் பெருமைகளை பற்றியும் எனக்கு விளக்குங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான்.  இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஒ

நந்தி வடிவங்கள்

Image
 காதில்லாத நந்தி, பின்னங்கால் இல்லாத நந்தி - சிவாலயங்களில் பரவசப்படுத்தும் நந்தி வடிவங்கள்!  பிரதோஷம் ஸ்பெஷல் .... ஓம் சிவாய நமஹ சிவ சிவாய நமஹ.... 'நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்' என்பார்கள். சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. அப்படியான நந்திப் பெருமானாரின் வடிவங்களையும் சிறப்புகளையும், திருநாமங்களையும் இங்கு காணலாம்.  *  அதிகார நந்தி: சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப்  பெருமானை வழிபட்டு, கொடிமரத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக்கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் நின்று, நந்தியம்பெருமாளின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர். * மால்விடை நந்தி: சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்திக்கு அடுத்து ஒரு நந்தி காட்சிதரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி. திரிபுர சம்ஹா