Posts

Showing posts from December, 2019

மந்திர புஷ்பம்

மந்திர புஷ்பம் (மிக எளிமையான ஸ்லோகம்) மந்திர புஷ்பம் ---------------------- யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்தரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (1) அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ அக்னேராயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோவா அக்னேராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (2) வாயுர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ வாயோராயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை வாயோராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (3) அஸௌவை தபன்னபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ முஷ்யதபத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோவா அமுஷ்யதபத ஆயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (4) சந்த்ரமா வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி ய:சந்த்ரமாஸ ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (5) நக்ஷத்ரத்ராணி வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ நக்ஷத்ர த்ராணாமாயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை நக

ருத்ராட்சம் மகிமை

Image
கலியுகத்தில் தியானம் செய்வதை விட நாம ஜெபம் செய்வதுதான் நல்லது எனறு சொல்கிறார்களே ...... அது உண்மையா ? நாம ஜபம் செய்யும் முறை பற்றி சற்று விளக்கவும். முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு விட்டு அது நல்லதா ? இது நல்லதா ? என்று குழம்பிக் கொண்டிருப்பது எப்பொழுதுமே நல்லதில்லை. ஆன்மீக வழியில் சென்ற நம் முன்னோர்கள் இத்தகைய நடைமுறைகளை எதற்காக வடிவமைத்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி தனக்குத் தானே சிந்தித்துப் பார்க்க முதலில் பழகிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நமது யூகம் தவறாகக் கூட போய் விடக் கூடும். பரவாயில்லை, வேறு யார் மூலமாவது சரியான விடை கிடைக்கும் பொழுது நம் கருத்தை நாம் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், யாரோ ஒருவர் சொல்கிறார் என்பதற்காக நம் நடைமுறைகளை, சாதனங்களை மாற்றிக் கொண்டேயிருக்கக் கூடாது. பிறகு நம்மால் எந்த வகையிலும் முன்னேற்றமடைய முடியாமல் போய் விடும். ஜபம் என்றால் என்ன ? ஏதேனும் ஒரு மந்திரத்தையோ, நாமத்தையோ மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டேயிருப்பது ஜபம். மந்திரம் என்றால் என்ன ? மனதை திடப்படுத்துவது மந்திரம். அதாவது சிதறி ஓடுகிற எண்ண அலைகள