Posts

Showing posts from January, 2019

பிரச்சினைகள் தீர எளிய வழி

Image
குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர எளிய வழி... குடும்பத்தில் அமைதியே இல்லை, எதற்கெடுத்தாலும் பிரச்சனை. இந்த நிலை மாற எளிய பயனுள்ள ஒரு பரிகாரம் உள்ளது. குடும்ப தோஷம் இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும். இதுக்கு ஒரு எளிய பரிகாரம். நெல், அட்சதை, விரலி மஞ்சள், ஒரு ரூபாய் காசு, வெத்தலை பாக்கு, அதோட, உங்க குடும்பத்தில் காலமான மூதாதையர்களோட பெயரை (உங்க ஞாபகத்துல உள்ள வரை) ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொள்ளுங்கள். அனைத்தையும் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில கட்டி, பூஜை அறையில் வைத்து அதற்கு தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி காட்டி, மனசார உங்க இஷ்ட தெய்வத்தை வணங்கி வந்தால் மிக விரைவில் உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக தீர்ந்து சந்தோஷம் பெருகும், அமைதி ஏற்படும்.🌷 வாழ்க வளமுடன்...🙏 You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

நவக்கிரக பரிகாரங்கள்

Image
நவக்கிரகங்களும் எளிய பரிகாரங்களும்: சூரிய பகவான் : பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடம் இருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியபகவானாவார். தினமும் நீராடியவுடன் கிழக்கு திக்கை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் நீரில் நின்று சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு உகந்தது. சந்திர பகவான் : சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் உயர்கிறது. சுக்கிலபட்சம் என்ற வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் மனிதனின் அறிவுத் திறமை குறைகிறது. (இதனால் தான் நல்ல காரியத்தை வளர்பிறையில் துவங்குகிறார்கள்) திங்கட்கிழமையில் உபவாசம் இருந்து ஏதாவது கோவில் ஒன்றில் மாலையில் தீபம் ஏற்றுவது சந்திரதோஷ பரிகாரமாகும். அங்காரகன் : உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் செவ்வாய் என்கின்ற அங்காரகன். பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் என்பர். ஆனால்

போகிப் பண்டிகை

Image
இந்திரனைப் போற்றும் போகிப் பண்டிகை ➖➖➖➖➖➖➖➖➖➖ போகி பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம், சாதாரணமாகவே சூரியோதய காலத்தில் பூஜை, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. தேவதைகளுடைய உஷத் காலமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. அந்த சமயத்தில் பூஜை, பஜனை போன்றவை தவிர வேறெதுவும் செய்யும் பழக்கமே கிடையாது. மார்கழி மாதம் பக்தி செய்வதற்கே உண்டானது. இதற்குபின், தை வந்த பிறகு தான் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பகவத் சம்பந்தமான மங்கள காரியங்கள் மார்கழி மாதத்தில் நடைபெறும். போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்ட

நரசிம்மர் மந்திரம்

Image
நரசிம்மர் மந்திரம் நடக்காததையும் நடத்தி காட்டும்...!! நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தடைகள், இடைஞ்சல் என்று! தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான். நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள், ஆனால் ஏதோ தடங்கள், இடைஞ்சல் என்று! தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான் இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது. “யஸ்ப அபவத் பக் தஜன ஆர்த்திஹந்து பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி ந்ருஸிம் ஹம் சரணம் பிரபத்யே” You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

ஸ்ரீ அனுமன் ஜெயந்தி

Image
ஸ்ரீ அனுமன் ஜெயந்தி நம் தமிழ் மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி மாதம். கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது “மூலம்” நட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அன்றைய தினமே அனுமன் ஜெயந்தியாக நாடெங்கிலும் கொண்டாடப்படுகின்றோம் . ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை “ராம” நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். அனுமனுக்கு செந்தூரம் ஏன்!! ராம, ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதையை பார்த்து செய்தியை கூற அனுமன் சென்ற