Posts

Showing posts from November, 2018

தர்ப்பைப் புல்

Image
தர்ப்பை புல் ************** தர்ப்பை புல்    என்றவுடனே ஏதோ சாங்கியத்திற்கான புல் என்று எண்ண வேண்டாம் . ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் .. அவருக்கு இன்னொரு பக்கம் இருக்கு பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம் தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம். இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம். தர்ப்பைப்

ஐயப்பன் பற்றிய தகவல்கள்

Image
ஐயப்பன் பற்றிய 50 தகவல்கள்..!! ______________________ 1. சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம் புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. 2. ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள். 3. ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு அய்யப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. 4. சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு. 5. கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தி ஒன்றையே அய்யப்பன் விரும்புகிறார். 6. கடன் வாங்கியாவது சபரிமலைக்கு வா... என்று தன் பக்தர்களுக்கு அய்யப்பன் ஒரு போதும் சொன்னதே இல்லை. 7. சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் அய்யப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக

செல்வ வளம் தரும் குபேர பூஜை

Image
வியாழக்கிழமை இதைச் செய்யுங்கள் செல்வம் பெருகும் ________________________________ ஒவ்வொரு வாரமும் வியாழன் கிழமை அன்று மாலை 5- இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபார நஷ்டம் உள்ளவர்கள் 5 வியாழன் தொடர்ந்து மாலையில் குபேர தீபம் ஏற்றி லக்ஷ்மி குபேர நாமம் சொல்லி வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். குபேர பூஜை எப்படி செய்ய வேண்டும்? முதலில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து வண்ணக் கோலமிட்ட பின் பூஜை அறையில் குபேர கோலம் போட வேண்டும். பின் லக்ஷ்மி தேவியை சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் முடித்து விட்டு இனிப்புகளை வைத்து வணங்க வேண்டும். பூஜையின் போது திரு சூக்தம், லக்ஷ்மி அஷ்டகம், வேத மந்திரங்கள் ஆகியவற்றை கூறி ஜெபிக்கலாம். அதன் பின்னர் ஒரு தட்டில் ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இதனால் தனம், தானியம், செல்வம், வீடு தைரியம், வீரம், அறிவு ஆகிய அனைத்தையும் பெற முடியும். You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/

சப்தபதி என்பது

Image
திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்? சம்ஸ்கிருதத்தில் இதை'சப்தபதி' என்று கூறுவார்கள். அதாவது ஏழுஅடிகள்மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன்உனக்குதுணையிருப்பான்என்றுகீழ்கண்டவாறுத‌னதுபிரார்த்தனையைச்சொல்கிறான்! "முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்" "இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்" "மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்" "நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்" "ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்" "ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள்நிலையாக தொடர வேண்டும்" "ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்" என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல் விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். இரண்டு நபர்கள் ஒன்

கஷ்டங்கள் தீர,

Image
செல்வ வளத்தை அதிகரிக்க ••••••••••••••••••••••••••••••• இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும். செல்வவளம் பெருகி நிலைக்க பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக் கொள்ளவும். ( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ). நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக் கொள்ளவும். செல்வவளம் பெருகி நிலைக்க ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ). தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும். செல்வவளம் பெருகி நிலைக்க எந்த விஷயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறிய

பூரி ஜெகநாதர்

Image
பூரி ஜெகநாதர் கோவிலில் ஆச்சர்யமூட்டும் ரகசியங்கள்!!! ••••••••••••••••••••••••••••••••••••••••••••• அறிவியல் கூட இங்கு நடக்கும் விசித்திரமான சம்பவங்களுக்கு பதில் கூற தடுமாறுகிறது. கோவிலில் இருக்கும் மடப்பள்ளி உலகிலேயே பெரிய மடப்பள்ளியாக விளங்குகிறது. இந்த கோவிலில் சமைக்கும் பிரசாதம் எப்போதும் ஒரே அளவில் தான்  இருக்கும் . ஆனால், பக்தர்களின்   வருகை கூடினாலும், குறைந்தாலும் தயாராகும் பிரசாதம் ஒருபோதும் பக்தர்களுக்கு பற்றாமல் போனதில்லை; அது போல மீதமும் ஆவதில்லை . *இந்த அதிசயம் யாருக்கும் விளங்கவில்லை*. இந்த கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம், நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் உங்களை நோக்கி பார்ப்பது போலவே காட்சி அளிக்கும். *அப்படி ஏன் தெரிகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது*. அதே போல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு இருக்கும். *உயரம் 214 அடி*.  அபரிமிதமான  மழை என்றாலும், குளிர் என்றாலும், வெயில் என்றாலும், மூன்று பேர் கொண்ட குழு எவ்வித கஷ்டமும் இன்றி உச்சிக்குச் சென்று தினமும் கொடி ஏற்றுவர். இது சாதரணக்கொடி அல்ல, ஏன

சாய்பாபா விரதம்

Image
நினைத்த காரியங்களை நிறைவேற்றி தரும் சாய்பாபா விரதம்.. எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி காலை அல்லது மாலை சாய்பாபாவின் படதிற்கு பூஜை செய்து பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொண்டு அல்லது ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தி செய்யலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது. பலகையில் மஞ்சள் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிறமலர்கள் மாலை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை வணங்கவும். முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாய் விரத கதை, சா

திருவோண விரதம்

Image
வாழ்வில் திருப்பங்கள் அருளும் திருவோண விரதம்... திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பிலா பேறுடன் வைகுந்தப் பதவியை அடைவார்கள் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள்  குழந்தை வரம் பெறுவார்கள். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், முதல் நாள் இரவே உணவு உட்கொள்ளக்கூடாது. அதிகாலை நீராடி, பெருமாள் ஆலயத்துக்குச் சென்று துளசி மாலை சாத்த வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக்கொண்டு, பெருமாளைக்குறித்த பாடல்களைப் பாராயணம் செய்தல் வேண்டும். மதிய உணவில் உப்பே சேர்க்காமல் சாப்பிட வேண்டும். மாலையில், சந்திர தரிசனம் காண வேண்டும். இதனால், சந்திரதோஷம் இருந்தால் விலகிவிடும். ஒருமுறை திருவோண விரதம் இருந்தால்கூட போதும், சந்திரனின் அருள்பெற்று அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி, இனிமையான வாழ்வு கிட்டும் என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். திருப்பங்களை நல்கும் திருவோண விரதத்தை மேற்கொண்டு வளங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/group

ஓம் முருகா

Image
முருகன் துதி ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் குரு பகவானின் அருள் கிடைக்கும், செவ்வாய் தோஷம் விலகும். அதோடு நமது நாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் சத்திய வாக்காக இருக்கும். நமது எண்ணமும் செயலும் நன்னெறிகளை நோக்கி இருக்கும். இதன் காரணமாக சமுதாயத்தில் நமக்கான ஒரு அறிய இடம் கிடைக்கும். நமது நிலையானது படிப்படியாக உயரும். நம் மீது மக்களுக்கு மரியாதை ஏற்படும். You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

சரவண பவ என்பதன் பொருள்

Image
சரவண பவ என்பதன் தத்துவம் ____________________________________ படைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோ முக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான். உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு கு

முருகப்பெருமான் அழித்த ஆறு பகைவர்கள்

Image
முருகன் அழித்த  ஆறு பகைவர்கள் 🙏:-*:-*:-*:-*:-*:-*:-*🙏:-*:-*:-*:-*:-*:-*:-*🙏 ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும் முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும். கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும். முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும். முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும். முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர். முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும். முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும். முரு

சூரசம்ஹாரத் திருவிழா

Image
#திருச்செந்தூர்_சூரசம்ஹார_விழா__ :-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற உள்ளது அல‌ங்காரமாக வ‌ந்த முருக‌ன், சூரனை ச‌ம்ஹார‌ம் செ‌ய்த கா‌ட்‌சியை ‌திரு‌ச்செ‌‌ந்தூ‌ரி‌ல் கூடி‌யிரு‌ந்த ஆ‌யிர‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் இன்று காண்பார்கள் பலரு‌ம் ‌திரு‌ச்செ‌ந்தூ‌‌ர் கட‌ற்கரை‌யி‌ல் ‌நீராடி த‌ங்களது க‌ந்த ச‌‌ஷ‌்டி ‌விரத‌த்தை முடிக்க பெறுவார்கள் . திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 29ஆம் தேதி துவங்கிய கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. பக்தரகள் விரதமிருந்து இறைவனை தரிசனம் செய்கின்றனர். கோயிலிலும் சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடந்த வண்ணம் உள்ளன. இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகளும் நடக்கின்றன. இன்று மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹார விழா நடக்க உள்ளது முதலில் கஜமுக

வாழ்வு அளிக்கும் தீபங்கள்

Image
தீபாவளி நாளில் தீபம் ஏற்றுவதன் பலன்கள் வாழ்வளிக்கும்_தீபங்கள்___ பிரகாசமான வாழ்க்கைக்கு தினமும் தீபம் ஏற்றுவது சிறந்தது. இறைவனோடு நம்மை நேரடியாக சம்பந்தப்படுத்துவது தீப வழிபாடுதான். தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், அவர் மெய் உணர்வைப் பெற முடியும் என்று அப்பர் கூறியுள்ளார். தீப ஜோதி நமோஸ்துதே அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை ஆன்ம ஜோதி ரூப என இறைவனையும், ஆன்மாவையும் ஜோதி ரூபமாக ஒளி பிரகாசமாக வழிபட்டு வரும் முறையை நம் முன்னோர் பண்டைய காலத்திலிருந்தே வழிமுறை படுத்தி உள்ளனர். எந்த மதத்திலும் தீப ஒளி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த ஒரு நல்ல நிகழ்வும் விளக்கு ஏற்றியே தொடங்கப்படுகின்றது. வீட்டிலும் சரி, கோவில்களிலும் சரி காலையும், மாலையும் தீபங்கள் ஏற்றுவது நமது கலாச்சாரம்.இதனால் வீடுகளில் பிரச்சினைகள் வராது. புண்ணியமும், ஞானமும் அதிகரிக்கும். திருவண்ணாமலை தீப தரிசனத்தினை வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்காத இந்து இருப்பது அரிது.தீபம் புற

துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு

Image
துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு... விரதமிருந்து ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது. ராகுகால துர்க்கை விரத பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம். அப்போது எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள். ராகு கால நேரம் தொடங்கிய பிறகே எலுமிச்சைப் பழத்தை நறுக்க வேண்டும். அதற்கு முன்பே நறுக்கி வைத்தல் கூடாது. எலுமிச்சை தேவ கனி என்பதால், அதனை நறுக்கும்போது தோஷங்கள் ஏற்படும். எனவே பழத்தை நறுக்கும்போது ‘ஐம்’ என்ற சரஸ்வதியின் பீஜ மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பழத்தைப் பிழிந்து விட்டு மூடியை வெளிப்பக்கமாகத் திருப்பும் போது மகாலட்சுமிக்கு உரிய ‘க்ரீம்’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது அவசியம். தூய்மையான புதிய பஞ்சு திரியை எலுமிச்சை மூடியில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும்போது ‘க்லீம்’ என்ற தேவியின் மந்திரத்தைக் கூற வேண்டும். எலுமிச்சை விளக்கை ஏற்றும்போது ‘சாமுண்டாயை விச்சே’ என்று

தீபாவளிக்கு எண்ணெய் ஸ்நானம் ஏன்?

Image
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்...!!?? தீப ஒளி திருநாள் வாழ்வில் இனிமை பொங்கச் செய்யும் ஓர் இனிய நாளாகும். தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் மனதில் இருக்கும் இருள் அகல்வதற்கு பாதை போடுகிறது இந்த தீபாவளி திருநாள். பொதுவான நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரச் செய்யும் குளியல் ஆகும். எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தாலும் குளிக்கா விட்டாலும் தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் உண்டு. தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். தீபாவ