Posts

கடன் பிரச்சினை தீர மந்திரம்

Image
தீராத கடன் பிரச்சினைகள் தீர. நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடைபெற சாகம்பரி தேவி மந்திரம்*   🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯 சாகம்பரி தேவிக்குரிய சக்தி வாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் உடல் மற்றும் மன சுத்தியுடன் 108 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டில் இருக்கும் பூஜையறையில் அம்பாளின் படம் முன்பாக பழம் அல்லது கற்கண்டுகள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும்.  உணவு, உடை, தண்ணீர் போன்றவற்றிற்கு எப்போதும் குறைவு உண்டாகாது. தீராத கடன் பிரச்சினைகள் தீரும். நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடைபெறும். மந்திரம் ஓம் சாகம்பர்யை வித்மஹே சதாக்ஷ்யை ச தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்   🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼

பஞ்சபூத ஸ்தலங்கள்

Image
திருக்காளத்தி - காளஹஸ்தீஸ்வரர் கோயில். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏  சம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.  இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பதியில் இருந்து 38 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.  பஞ்சபூதத் தலங்களில் இக்கோவில் வாயுத் தலமாக விளங்குகிறது. கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவன் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.  ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார பூசைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். பெயர்க் காரணம் --- சீகாளத்தி என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சி

பஞ்சபூத ஸ்தலங்கள்

Image
சிதம்பரம் நடராசர் கோயில் 🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼 நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவேரி வடகரை சிவத்தலங்கள் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரம் பாடல் பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் பெயர் புராண பெயர்(கள்): தில்லை, பெரும்பற்றப் புலியூர், தில்லைவனம் பெயர்: சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் Thillai Nataraja Temple தமிழ்நாடு கோயில் தகவல்கள் மூலவர்: திருமூலநாதர் (மூலட்டனேஸ்வரா் சபாநாயகா் கூத்தப்பெருமாள் விடங்கா் மேருவிடங்கா் தட்சிணமேருவிடங்கா் பொன்னம்பலகூத்தா் தில்லைவனநாதா் தில்லைநாயகா் தில

பஞ்சபூத ஸ்தலங்கள்

Image
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் 🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼 திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில் பெயர் புராண பெயர்(கள்): திருஆனைக்காவல், திருஆனைக்கா பெயர்: திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில் அமைவிடம் ஊர்: திருவானைக்காவல் மாவட்டம்: திருச்சிராப்பள்ளி கோயில் தகவல்கள் மூலவர்: ஜம்புகேஸ்வரர், திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர் உற்சவர்: சந்திர

பஞ்சபூத ஸ்தலங்கள்

Image
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்! 🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼 காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும். தேவாரம் பாடல் பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பெயர்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அமைவிடம் ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம்: காஞ்சிபுரம் மூலவர்: ஏகாம்பரேஸ்வரர் ஏகாம்பரநாதர் திருவேகம்பர் தாயார்: காமாட்சி ஏலவார்குழலி தல விருட்சம்: மாமரம் தீர்த்தம்: சிவகங்கை(குளம்), கம்பாநதி பாடல் பாடல் வகை: தேவாரம் பாடியவர்கள்: சமயக்குரவர் மூவர் கட்டிடக்கலையும் பண்பாடும் கட்டடக்கலை வடிவமைப்பு: தமிழர் கட்டிடக்கலை கல்வெட்டுகள்: சோழர்,பாண்டியர் காலக் கல்வெட்டுகள் மற்றும் பல வரலாறு அமைத்தவர்:! பல்லவ, சோழ அரசர்கள் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்துக் கோபுரம் திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐய

பஞ்சபூத ஸ்தலங்கள்

Image
அண்ணாமலையார் கோயில் பஞ்சபூத தலம் திருவண்ணாமலை 🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼 திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும் திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். அண்ணாமலையார் திருக்கோயில் பெயர்: அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு: அருணாச்சலேசுவரர் தமிழ்: திருஅண்ணாமலையார் திருக்கோயில் திருவண்ணாமலை மாவட்டம் அமைவு: திருவண்ணாமலை கோயில் தகவல்கள் மூலவர்: அண்ணாமலையார் (சிவன்) தாயார்: உண்ணாமுலையாள் (பார்வதி) சிறப்பு திருவிழாக்கள்: கார்த்திகை தீபம், கிரிவலம், சிவராத்திரி கட்டிடக்கலையும் பண்பாடும் கட்டடக்கலை வடிவமைப்பு: கோவில் வரலாறு கட்டப்பட்ட நாள்: கி. மு 10ஆம் நூற்றாண்டு அமைத்தவர்: சோழர்கள், பல்லவர்கள் திருவண்ணாமலை கோபுரங்கள் தூரப் பார்வையில் பிரம்

ஸ்ரீ கௌரி அம்மன் வடிவங்கள்

Image
பதினாறு பேறுகள் தரும் கௌரி வடிவங்கள் ஸ்ரீ கெளரி தேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமமாகும். அவள் சிவனிடம் உமையாகவும், திருமாலிடம் லட்சுமியாகவும், பிரம்மனிடத்தில் சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். இவ்வாறே வேளாண்மை செய்பவர்களிடம் செளபாக்ய கெளரி; வணிகர்களிடத்தில் சுவர்ண கெளரி; வீரர்களிடத்தில் ஜெயகெளரி, ஞானிகளிடத்தில் ஞானேஸ்வரி, அரசர்களிடத்தில் சாம்ராஜ்ய மஹாகெளரி என்று பல்வேறு வடிவங்கள் தாங்கி உலகெங்கும் நிறைந்திருக்கின்றாள். 🌷தீபாவளிக்கு மறுதினம் சுமங்கலிப் பெண்கள் "கேதார கௌரி விரதம்" அனுஷ்டிப்பது வழக்கம். மகாகௌரியான அம்பிகை சிவபெருமானின் முழு அருளையும் அன்பையும் பெற 21 நாட்கள் விரதம் மேற்கொண்டாள். அதுவே கேதாரீஸ்வரர் விரதம் அல்லது கேதார கௌரி விரதம் என்று போற்றப்படுகிறது. அதன் பயனாக ஈசன் உடலில் சரிபாதியைப் பெற்றாள் அம்பிகை. இந்த விரதத்தை பெண்கள் மேற்கொண்டால் கணவனின் முழு அன்பைப் பெறுவதுடன், பதினாறு பேறுகளையும் பெற்று வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. அம்பிகையை 16 வடிவங்களாகப் போற்றி, சோடசகௌரி வழிபாடு செய்தால் சகல பாக்கி

சக்தி வழிபாடு, அன்னை வழிபாடு

Image
🔥🌷🕉🙏🕉🙏🌷🔥 சக்தி வழிபாடு: தர்மம், உண்மை, நியாயம், நேர்மை, இரக்கம், பனிவு, கருனை மற்றும் இயற்கை இவைகளை கொண்டதது தான் தெய்வம். ஆகையால் சக்தியும் சிவமும் ஒன்று தான். இவற்றில் சக்தியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் சாக்தமாகும். இந்து சமயத்தில் இறைவனைத் தந்தையாக, தலைவனாக, தோழனாக, தனயனாக என்று பல வழிகளில் அடியார்கள் அன்பு பாராட்டினாலும் இவற்றில் தலைசிறந்ததும், அந்நியோன்மானதுமான அன்பு முறை தாய்-பிள்ளையாகும். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு சக்தி வழிபாடாகும். பிள்ளையானவன் நன்றே செய்கினும், தீதே செய்திடினும் மாறாத தாய் அன்புக்கு; ஒப்பானது தெய்வத்தின் அன்பு, கூடவே தாயின் தன்மையுடைய தெய்வத்தை வழிபடுவது யாருக்கும் எளிதாகிறது. சக்தி என்பது என்ன? சக்திக்கும் சிவத்துக்கும் இடையே என்ன தொடர்பு? இதனை விளக்குவதே இந்து மதம். சிவம் என்பது மெய்ப்பொருள். பிரியாது இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு சக்தி என்று பெயர்.சிவத்தினின்று சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம் யாவும் சிவசக்தி மயமானது. சக்தி பல்வேறு தொழில்களைப் புரியவும் பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்வேறு வடிவங்களை எடுக்கிறாள

தொழில் வியாபாரம் வசிய மந்திரம்

Image
வியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும்  🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼🔯🙏🏼 வட இந்திய வியாபாரிகள் பின்பற்றும் ஒரு ரகசிய முறையை இங்கு தருகிறேன் . படித்துப் பயன்பெறுங்கள். தொழில்,வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில்  மற்றும் வியாபார விருத்தி ஏற்படும்.மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும். வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பாயசம்,கற்கண்டு,பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். விளக்கேற்றி "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்" என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும். தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை  நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும். மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்ட

சிவ புராணம்

Image
துன்பங்களை போக்கும் சிவபுராணம் 🙏🙏🙏🙏🙏 நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஊங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன்சே வடி போற்றி நேயத்தே நின்ற நிமல னடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாளே அவன்றாள் வணங்கிச் சிந்தைமகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனயான் கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலாற் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்