Posts

Showing posts from September, 2020

ஆர்த்தி எடுப்பது ஏன்?

Image
 ஆரத்தி எடுப்பது ஏன்?!  அறிவியல் பூர்வமான காரணங்கள்!!!  காலம், காலமாக நமது பழக்கவழக்கங்களில் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று ஆரத்தி எடுப்பது. தற்போது நாம் இதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம்.  ஆனால், இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறையல்ல. கடவுளை வழிப்படும் போது எதற்கு ஆரத்தி காண்பிக்கிறோம் என்று தெரியுமா?  இதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக்கிறது. நாம் தினந்தோறும் ஆரத்தி எடுப்பது கிடையாது. முக்கிய நாட்களில் மட்டுமே எடுப்போம்.  திருமணம் முடிந்த தம்பதியர், பிரசவம் முடிந்த பெண், வெளியூர் பிராயணம் முடித்து வரும் நபர்கள் என இவர்களுக்கு தான் நாம் பொதுவாக ஆரத்தி எடுப்போம்....  இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்!  நம் முன்னோர்கள் ஏன் இந்த மாதிரயான சூழலில் மட்டும் ஆரத்தி எடுத்தார்கள், இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணிகள் என்னென்ன என்று காணலாம்.....   மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீர் நிரப்பி, மஞ்சள் அரைத்து சேர்த்து அதில

விநாயகர் காரிய சித்தி மாலை

Image
 விநாயகர் காரிய சித்தி மாலை:--- பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவண்பால் உதிக்குமோ எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம். உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ் உலகிற்பிறங்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்? உலகம்புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும் தொடரும் உயிர்கள் எவனருளால் கரர்வழ் பதியும் உறச்செய்யும் கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத் தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம். மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம் ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன் ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன் உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் பொய