Posts

Showing posts from August, 2020

வரலக்ஷ்மி விரதம்

Image
வரலஷ்மி விரதம்! ஸ்ரீவரலஷ்மி பூஜையை செய்தாள் சியாமபாலா. இந்த பூஜை செய்த பிறகு சில நாட்களிலேயே தங்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றி அரசராக சிம்மாசனத்தில் அமர்ந்தார் அரசர் பத்ரச்ரவஸ்.  அத்தனை மகத்துவமானது வரலஷ்மி விரதம் பூஜை முறை   காலையில் எழுந்து வாசலை பெருக்கி கோலம் போட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி முதலில் விநாயகர் பூஜையை செய்ய வேண்டும்.  ஈசானிய மூலையில் ஒரு மண்டபம் அமைத்து ஒரு படி நெல்லை சதுரமாகப் பரப்பி அதன் மீது ஒரு தாம்பூலம் வைத்து அதன் மீது அரிசியைப் பரப்பி அரிசியின் மேல் ஒரு குடம் வைத்து அந்த குடத்திற்குள் தண்ணீர் ஊற்றி, அந்த குடத்தின் சுற்றி சந்தனம் குங்குமம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து அந்த குடத்தின் மேல் மாவிலை சொருகி அதன் மேல் தேங்காயை வைத்து கலசத்தின் மேல் ஸ்ரீமகாலஷ்மி உருவத்தை அமைத்து நகைகளாலும் நறுமண மலர்களாலும் அலங்கரித்த பிறகு லஷ்மி மந்திரங்கள் உச்சரித்து பூஜிக்க வேண்டும்.  ஒன்பது முடிச்சு உள்ள சரடை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜைக்கு வந்த பெண்களுக்கு சரடுகட்டி வெற்றிலை-பாக்கு பூ தந்து அத்துடன் கொழுக்கட்டையும் வழங்க வேண்டும். ஸ்ரீ வரலஷ்மி பூஜை எண்ணற்ற வரங்க