Posts

Showing posts from February, 2020

சிவ புராணம்

Image
துன்பங்களை போக்கும் சிவபுராணம் 🙏🙏🙏🙏🙏 நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஊங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன்சே வடி போற்றி நேயத்தே நின்ற நிமல னடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாளே அவன்றாள் வணங்கிச் சிந்தைமகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனயான் கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலாற் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்

ஸ்ரீ சக்தி மந்திரம்

Image
தெய்வீக சக்தியை பெற உதவும் சக்தி மந்திரம்      🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 ஒருவர் செய்யும் அனைத்து செயலிற்கும் காரணம் அவரது மனமே. மன பலம் இல்லாத ஒருவர் அனைத்திலும் பலவீனமாகவே இருப்பார். மன பலவீனத்தை அதிகரிப்பது மன துயரமே. ஆகையால் மன துயரத்தை போக்கி, மனதை திடப்படுத்தி, உடல் சக்தியையும் ஆன்ம சக்தியையும், தெய்வீக சக்தியையும் அதிகரிக்க உதவும் ஒரு அற்புதமான மந்திரம் இதோ. சக்தி மந்திரம்: ஓம் தேஜோஅஸி தேஜோமயி தேஹி | வீர்யமஸி வீர்யம் மயி தேஹி | பலமஸி பலம் மயி தேஹி ஓஜோஅஸி ஓஜோமயி தேஹி | மந்யுரஸி மன்யும் மயி தேஹி | ஸஹோஸி ஸஹோமயி தேஹி || ஓம் பொருள்: ஆன்சக்தியாய் இருக்கும் இறைவா, எனக்கு ஆன்ம சக்தியை தர வேண்டுகிறேன். ஒழுக்க சக்தியாய் இருக்கும் இறைவா எனக்கு ஒழுக்க சக்தியை தர வேண்டுகிறேன். உடல் சக்தியாய் இருக்கும் இறைவா, எனக்கு உடல் சக்தியை தர வேண்டுகிறேன், தெய்வீக சக்தியாய் இருக்கும் இறைவா எனக்கு தெய்வீக சக்தியை தர வேண்டுகிறேன். தைரியத்தின் சொரூபமாக இருக்கும் இறைவா எனக்கு தைரியத்தை தர வேண்டுகிறேன். பொறுமையின் உச்சமாய் இருக்கும் இறைவா எனக்கும் பொறுமையை தர வேண்டுகிறேன். இறைவா, உனக்

நவ சக்திகள்

Image
நவசக்திகள் என்பவர்கள் யார்..? அவர்களின் பணிகள் என்ன...? 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும். சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரினங்களுக்கு உயிரினை தருபவள் சக்தியே. பராசக்தியின் வடிவங்கள் பலப்பல. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி வடிவமாக பராசக்தி விளங்குகிறாள். அன்னை பராசக்தியே இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நின்று உலக இயக்கத்தினை உருவாக்குகிறாள். சக்தியை வழிபடும் சாக்த மதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் முதன்மையானது ஒன்பது இரவுகள் உபவாசம் இருந்து அழிபடும் நவராத்திரி விரதமாகும். *நவசக்திகளின் பெயர்கள்:* 1. மனோன்மணி: பாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டு பக்குவமடைந்த உயிர்களை உலக இன்பங்களிலிருந்து விலக்கி சிவனுடன் சேர்க்கும் வல்லமை கொண்டவள். 2. சர்வபூதமணி: உலக உயிர்களில் கலந்து நின்று உயிர்களின் பாவம் மற்றும் புண்ணியங்களை நீக்கும் வல்லமை கொண்டவள். 3. பலப்பிரதமணி: சூரியனிடம் கலந்து நின்று தீயவற்றை அழித்து நன்மையை வளர்த்து ஆக்கம் தரும் வல்லமை கொண்டவள். 4. கலவிகரணி: வானத்தில் கலந்து நின்று எல்லா ப