Posts

Showing posts from October, 2019

திருநீறு, விபூதி

Image
இதைப் படிப்பவர்கள் விபூதியைத் இனியாவது அணிய வேண்டும் என்றும் பிராதிக்கிறோம். விபூதியைத் தரித்துக் கொள்ளும் முறைகளும் பெயர்களும் :- 1. உள் தூளனம் :- விபூதியை அப்படியே அள்ளி நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக்கொள்ளும் முறை "உள் தூளனம்" ஆகும். 2. திரிபுண்டரீகம் :- ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என மூன்று விரல்களால் இடைவெளி விட்டு மூன்று கோடுகளாக விபூதியைத் தரித்துக் கொள்ளும் முறை "திரிபுண்டரீகம்" ஆகும். திருநீற்றை மோதிர விரலால் எடுப்பதுதான் சிறந்தது. நம் உடலில் பவித்ரமான பாகம் என்று அது தான் கூறப்படுகிறது. வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று, விபூதியை எடுத்து கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகியவற்றால் எடுத்து, அண்ணாந்து நெற்றியில் பூச வேண்டும். "திருச்சிற்றம்பலம்"அல்லது "சிவாயநம" அல்லது "சிவ சிவ" என்று சொல்லி திருநீற்றினை அணிந்து கொள்ள வேண்டும். காலை, மாலை மற்றும் இரவு படுக்கப் போகும் போதும்..... வெளியே கிளம்பும் போதும்..... திருநீறு தரிக்க வேண்டும்..... நடந்து க

கண் திருஷ்டி போக

Image
கண் திருஷ்டி போக 🔯உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா? தினந்தோறும் இரவு 7 மணிக்கு இப்படி செய்யுங்கள்!! ⚜ அந்த காலங்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவார்கள். அதனால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது. ⚜ அதே போன்று நீங்களும் வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால்  புகை போட்டு வாருங்கள்.  இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும். ⚜ அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து போட்டால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.  உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அதற்கேற்ற சாம்பிராணியை போட்டு வாழ்வில் அனைத்து வளமும் பெறலாம். ⚜ சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும். ⚜ சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும். ⚜ சாம்பிராணியில் மருதாணி விதைகளை போட்டு  தூபமிட சூனிய கோளாறுகள் விலகும். ⚜ சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம

ஸ்ரார்த்தம்

Image
ஸ்ராத்தம் பற்றிய விரிவான தகவல்கள் : இப்பதிவை  பத்திரமாக தங்கள் கோப்பையில் சேமித்து  வைத்து கொள்ளவும். நம் முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் பற்றிய முழு தகவல்களும் அறிந்துகொள்வோம்.  வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடையின்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. இதனால், பித்ருதோஷம்தான் ஏற்படும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.  தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.  தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெய