காயத்ரி மஹாத்மியம்
#காயத்ரி_மஹாத்மியம்_ தேவி பாகவதத்தில் 12-ஆவது ஸ்காந்தத்தில் 51 மற்றும் 52 வது அத்தியாயங்களாக அமைந்திருப்பவைதான் காயத்ரி மஹாத்மியமும், காயத்ரி ஸஹஸ்ரநாமமும், நாரத முனிவருக்கு நாராயண ரிஷியால் இவை உபதேசிக்கப்பட்டன. காயத்ரி மஹாத்மியத்தில் 24 ஸ்லோகங்களைக் கொண்ட காயத்ரி ஸ்தோத்திரம் அடங்கியுள்ளது. காயத்ரி என்கிற பதம் காய்+த்ரீ எனப் பிரிந்து பொருள் தரும். அதாவது காய் என்றால் கானத்திற்கு உரியது. பாடப்பெறுவது எனப் பொருள் கொள்ளாமல் காயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி தியானித்தால் பெரும் பலன் உண்டு. த்ரீ என்பது த்ராயதே என்று விரிந்து காப்பாற்று எனப் பொருள்படும். அன்னை காயத்ரி தனது அபய கரங்களால் நமது பயத்தைப் போக்கியருள்வாள். கா+ய+ஆ+த்ரீ எனும் நான்கு எழுத்துக்களின் சேர்க்கைதான் காயத்ரி. இதில் கா-என்பது நீர் தத்துவமாகிய கண்களுக்குப் புலப்படும் ஸ்தூலத்தைக் குறிப்பது. இதற்கு அதிபதி பிரம்மன். ய-என்பது வாயு தத்தவமாகிய சூட்சுமத்தைக் குறிப்பது. இதற்கு அதிதேவதை விஷ்ணு. ஆ-என்பது காரணதேகம். இதன் அதிபதி ருத்ரர். த்ரீ-எனும் பதம் இம்மூவரும் சேர்ந்து நம்மைக் காப்பாற்றியருள்வர் என்பதைக் குறிக