Posts

Showing posts from June, 2019

தன்வந்திரி பகவான் ஸ்லோகம்

Image
ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஸ்லோகம் சதுர்புஜம் பீத வஸ்திரம் ஸர்வாலங்கார சோபிதம் த்யோயேத் தன்வந்த்ரிம் தேவம் ஸூராஸூர நமஸ்க்ருதம். நோய்கள் விலக, நோயற்ற வாழ்வு கிடைக்க மேலே உள்ள மந்திரத்தை முழுமனதுடன் கூறி வழிபட்டு தன்வந்திரியை சரண் அடையவும்.

குழந்தை பேறு தரும் மந்திரம்

Image
குழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம்!   தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத: தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்

தேவாரப் பாடல்கள்

Image
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள் """""""""""""""""""""""""" நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி, சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம். அசுவினி: தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன் எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதே மிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும் திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே பரணி: கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானை இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப் பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும் அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே. கார்த்திகை/கிருத்திகை: செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளார் எல்லிய விளங்க நின்ற